‘இந்தியன் 2’ படத்தில் கார்த்திக் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் 13-ம் தேதி தொடங்கும் என கூறப்படுகிறது.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம் 'இந்தியன் 2'. இந்தப் படத்தில் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இதற்கான படப்பிடிப்பு கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கியது. ஆனால், அப்போது ஏற்பட்ட விபத்து காரணமாக படம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து கரோனா, படத்தின் பட்ஜெட் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட காரணங்களால் படப்பிடிப்பு தடைப்பட்டது.
» “ஆளுநரிடம் அரசியல் குறித்து பேசினேன்” - நடிகர் ரஜினிகாந்த்
» அடிபொலி ஃபஹத் - ‘கும்பளாங்கி நைட்ஸ்’ காட்சி அனுபவத்துடன் ஒரு பிறந்தநாள் வாழ்த்து
இதனால் இயக்குநர் ஷங்கர் ராம்சரணை வைத்து இயக்கும் 'RC15' படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே. கமல் நடிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படம் மெகாஹிட் அடித்த நிலையில், 'இந்தியன் 2' படத்தின் பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டு தற்போது மீண்டும் ஷூட்டிங்கிற்கு ஆயத்தமாகிறது படக்குழு.
இந்நிலையில், படத்தில் விவேக், நெடுமுடி வேணு நடிக்க இருந்த காட்சிகளில், அவர்கள் மறைந்ததால், அவர்களுக்கு பதிலாக இருவரின் கதாபாத்திரங்களில் ஒரு கேரக்டரில் கார்த்திக்கை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகலாம் என கூறப்படுகிறது. இதனிடையே, நடிகை காஜல் அகர்வாலுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்த நிலையில், இந்தப் படத்தில் இருந்து அவர் விலகிவிட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், இந்தத் தகவலை அவர் மறுத்து அவரும் செப்டம்பர் 13-ம் தேதி முதல் ’இந்தியன் 2’ படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
13 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago