தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. படம் ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் 'திருச்சிற்றம்பலம்'. தனுஷ் நடிக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் இதனை தயாரித்துள்ளார். இதில், பிரகாஷ் ராஜ், இயக்குநர் பாரதிராஜா, ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து அண்மையில் 'மேகம் கருக்காதா' பாடல் வெளியாகி வாட்ஸ்அப்பில் அனைவரின் ஸ்டேட்ஸாக உருமாறியிருக்கிறது. இந்நிலையில், தற்போது படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி?
உணவு டெலிவரி செய்யும் தனுஷ் வழக்கமான வாழ்க்கையை வாழ்ந்து வருபவராக காட்டப்படுகிறார். ஜாலியான தாத்தாவாக பாரதிராஜாவும், கண்டிப்பான அப்பாவாக பிரகாஷ்ராஜூம் ஈர்க்கின்றனர். ஆனால், 'யாரடி நீ மோகினி' படத்தில் பார்த்த ரகுவரன் கேரக்டரில் தற்போது, பிரகாஷ்ராஜை பொருத்தி பார்க்கும் உணர்வைப்படம் தருகிறது. 'பழம்' என்ற பெயர் ட்ரெய்லரில் கூடுதல் கவனத்தைப்பெறுகிறது. நித்யாமேனன் பெண் தோழியாக தோன்றுகிறார். பிரியா பவானி சங்கர், ராஷிகா கண்ணா நாயகிகளாக வந்து செல்கின்றனர். மொத்தத்தில் மித்ரன் ஜவஹர் ஸ்டைலில் மீண்டும் ஒரு பேமிலி, காதல், நட்பை உள்ளடக்கிய படத்தை எதிர்பார்க்கலாம் என தோன்றுகிறது.
» 6 வருடமாக திருமணம் செய்துகொள்ள சொல்லி துன்புறுத்தும் இளைஞர் - நித்யா மேனன்
» ‘அப்பு எக்ஸ்பிரஸ்’... புனித் ராஜ்குமார் நினைவாக ஆம்புலன்ஸ் நன்கொடை அளித்த பிரகாஷ்ராஜ்
முக்கிய செய்திகள்
சினிமா
22 mins ago
சினிமா
14 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago