நடிகர் ரஜினிகாந்த் டெல்லிச் சென்றுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நாடு முழுவதும் 75வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கியுள்ளன. 75 ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடும் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி டெல்லியில் நடந்துவருகிறது. இதில் இந்தியாவின் முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த்தும் டெல்லி சென்றுள்ளார். ரஜினி டெல்லியில் முக்கிய பிரபலங்களை சந்தித்துள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை ரஜினிகாந்த் சந்தித்துள்ளார். இதேபோல், அரசு நிகழ்ச்சி நடைபெறும் கட்டிடத்துக்கு வெளியே பாலிவுட் மூத்த நடிகரும், சமீபத்தில் வெளியான தி காஷ்மீர் பைல்ஸ் படத்தில் முக்கிய அங்கம் வகித்த அனுபம் கெர்ரும் ரஜினிகாந்த்தும் சந்தித்துள்ளனர். இந்தச் சந்திப்பை புகைப்படமாக தனது இஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் அனுபம் கெர். அதில், "என் நண்பர் ரஜினிகாந்த் போல் யாரும் இல்லை. இருக்கவும் முடியாது, என்றும் முடியாது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ரஜினி நடிக்கவுள்ள ஜெயிலர் படப்பிடிப்பு டெல்லியில் இன்னும் சில தினங்களில் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago