விஜய் சேதுபதி படத்தில் நான் நடிக்க முடியாது: ‘நட்டி’ நட்ராஜ் நேர்காணல்

By கா.இசக்கி முத்து

இந்தி, தெலுங்கில் முன்னணி படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி வரும் ‘நட்டி’ நட்ராஜ், தமிழில் நாயகனாக வலம் வருகிறார். ‘சதுரங்க வேட்டை’ திரைப்படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது இவருக்கு பல படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. அவருடன் உரையாடியதில் இருந்து..

‘போங்கு’ படத்தின் கதைக்களம் பற்றி...

வாழ்க்கையில் ஒரு நல்ல பட்டம் கிடைத்தால், அதை தக்க வைத்துக்கொள்ள நிறைய போராட வேண்டும். ஒரு சின்ன தவறால் தவறான பட்டம் கிடைத்தால், அது ஒரு மனிதனின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிடும். இதுதான் படத்தின் கதைக்களம். நாங்கள் கார் நிறுவனத்தில் பணியாற்றுவோம். ஒரு எம்.பி. வந்து காரை ‘புக்’ செய்வார். நாங்கள் காரை ஒப் படைக்கும்போது, எங்கள் கண் முன்னால் காரை திருடிக்கொண்டு போய்விடுவார்கள். பழி எங்கள் மீது விழ, ஜெயிலுக்கு போவோம். ஒருவரது விஷயத்தில் தவறு நடந்தால் கார்ப்பரேட் நிறுவனங்கள் ப்ளாக் லிஸ்ட் பண்ணிவிடும். அதனால் வாழ்க்கை எப்படி மாறுகிறது, காரை திருடி யது யார், மறுபடியும் எப்படி வேலைக்கு சேர்ந்தோம் என்பது தான் திரைக்கதை.

வசனங்களைப் பார்த்தால் ‘சதுரங்க வேட்டை’ சாயல் தெரிகிறதே?

ஒருவேளை, என் வசன உச்சரிப்பு அதுபோன்ற தோற்றத்தைக் கொடுக்கிறதோ, என்னவோ. ‘சதுரங்க வேட்டை’ கதைக்களம் வேறு, இதன் கதைக்களம் வேறு. அதே நேரம், ‘சதுரங்க வேட்டை’ மாதிரியே நல்ல வேகமான திரைக்கதை இப்படத்திலும் அமைந்திருக்கிறது. மக்களிடையே ‘சதுரங்க வேட்டை’ நல்ல வரவேற்பை பெற்றதால், இந்த ஒப்பீடு வந்துவிடுகிறது.

‘எங்கிட்ட மோதாதே’ படத்தின் போஸ்டர், டீஸர் பெரும் வர வேற்பை பெற்றிருக்கிறதே...

இது ஒரு வாழ்வியல் படம். இப்போதெல்லாம் ஒரு காட்சி, டிரெய்லர் உள்ளிட்டவற்றை வைத்து ஒரு படத்தில் என்ன இருக் கிறது என்று ஊகிக்க முடிகிறது. அப்போது இதெல்லாம் கிடையாது. அந்த காலத்தில் ரசிகர்கள், நாய கர்கள், திரைப்படங்கள் இடையே பாலமாக இருந்தது விளம்பர பலகை. திரையரங்குகளில் 80 அடி உயரத்துக்கு கட்-அவுட் வைத் திருப்பார்கள். அதுதான் ஒரு ரசிகனை தியேட்டருக்குள் இழுக் கும். படத்தில் என்ன இருக்கும் என்பதே தெரியாமல், ரசிகர்கள் படம் பார்க்கப் போவார்கள். 1987-89ம் ஆண்டுகளில் நடக்கும் கதைதான் ‘எங்கிட்ட மோதாதே’. நாயகன் வரைந்த ஒரு விளம்பர பலகை, அவனது வாழ்க்கையை மாற்றுகிறது. அதற்குள் இருக்கும் அரசியலைத் தாண்டி எப்படி நாயகன் வெளியே வருகிறான் என்பது திரைக்கதை.

‘சதுரங்க வேட்டை’யைத் தொடர்ந்து பல இயக்குநர்கள் கதை சொல்ல வந்திருப்பார்களே...

இங்கு வெற்றி மட்டுமே அனைத்தையும் தீர்மானிக்கிறது. ‘சதுரங்க வேட்டை’ படத்தோடு பல படங்கள் வெளியானாலும், அந்த படத்தைப் பற்றி இன்றும் பலரும் பேசுகிறார்கள். நடிப்பு, ஒளிப்பதிவு எதுவாக இருந்தாலும் வெவ்வேறு களங்களில், புதிது புதிதாக பணியாற்ற விரும்புபவன் நான். வித்தியாசமான கதையைக் கேட்டால், உடனே ஒப்புக்கொள் வேன். நான் வித்தியாசமான கதைகளை முயற்சி செய்பவன் என்று தயாரிப்பாளர்களும் நம்பு கிறார்கள். ‘சதுரங்க வேட்டை’க்குப் பிறகு சுமார் 100 கதைகள் கேட் டிருப்பேன். நிறைய கதைகள் ஒரே மாதிரி சாயலில் இருந்தன. விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களில் எல்லாம் என்னால் நடிக்க முடியாது. அதுபோன்ற கதைகள் வந்தால், ‘இது செட்டாகாது. நான் நடித் தால், நம் இரண்டு பேருக்குமே பாதிப்பு’ என்று சொல்லி தவிர்த்துவிடுவேன்.

தமிழில் அவ்வளவாக ஒளிப்பதிவு செய்வதில்லையே..

பெரிய படங்களே வந்தாலும், நல்ல படங்களை மட்டுமே ஒப்புக் கொள்கிறேன். நான் முழுக்க முழுக்க கதையை மட்டுமே நம்புகிறவன். தமிழ் திரையுலகில் நல்ல படங்களின் ஒளிப்பதிவுக்கு என்னை அணுகவில்லையே என்ற வருத்தம் இருப்பது உண்மைதான். இப்போது தமிழில் நடிகனாக மட்டுமே கவனம் செலுத்தி வரு கிறேன். மற்ற திரையுலகில் ஒளிப் பதிவு செய்கிறேன். நான் ஒளிப் பதிவாளராக ஒரு விஷயத்தைச் சொல்வதைவிட நடிகனாக சொல் வதுதான் பெரிய அளவில் பேசப் படுகிறது. தமிழ் திரையுலகில் முதலில் என்னை ஒளிப்பதிவாள ராககூட யாரும் பார்க்கவில்லை. இந்தி பட ஒளிப்பதிவாளர் என்று நினைத்தார்கள். நான் நடிகனான பிறகுதான், ‘அட இவர் பெரிய ஒளிப்பதிவாளர்’ என்றார்கள். நான் கடந்து அடுத்தகட்டத்துக்குப் போன பிறகுதான், முந்தைய கட்டத்துக்கு அங்கீகாரம் கொடுக்கிறார்கள். அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. எல்லாம் கலந் ததுதான் திரையுலகம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்