‘‘அதிதிக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது’’ - ‘விருமன்’ பட விழாவில் கார்த்தி பேச்சு

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் கார்த்தி நடித்துள்ள ‘விருமன்’ படத்தை முத்தையா இயக்கியுள்ளார். சூர்யாவின் 2டிஎன்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தின் பாடல்கள், டிரெய்லர் வெளியீட்டு விழா மதுரையில் நடந்தது.

இதில் சு.வெங்கடேசன் எம்.பி.,இயக்குநர்கள் பாரதிராஜா, ஷங்கர், நடிகர்கள் சூர்யா, கார்த்தி, கருணாஸ், சூரி, நடிகைகள் அதிதி ஷங்கர், வடிவுக்கரசி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் சூர்யா பேசியதாவது:

இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் இப்படத்தில் அறிமுகமாகிறார். உங்கள் வரவு, நல்வரவாகுக. உங்களுக்கான மரியாதையை இந்த சினிமா உலகம் கொடுக்கும். பாலா, அமீரின் பெயரைக் கூறாமல் இந்த மேடையைவிட்டு இறங்க முடியாது. எனக்கும், கார்த்திக்கும் அவர்களால்தான் அடையாளம் கிடைத்தது.

கார்த்திக்கு முன்பே, நான் நடிக்க வந்தாலும், சினிமாவுக்காக, சினிமா துறைக்காக என்னைவிட அதிகம் சிந்திப்பது கார்த்தி. என்னைவிட சிறந்த நடிகர் அவர். இவ்வாறு சூர்யா கூறினார்.

நடிகர் கார்த்தி பேசும்போது, ‘‘சினிமா துறைக்கு ஒரு பெண்ணை எளிதில் அனுமதிக்க மாட்டார்கள். நான் நடிக்க வரும்போதே, என் அப்பா வேண்டாம் என்றார். அப்படி இருக்க, தன் மகளை நடிக்க அனுமதித்த ஷங்கர் சாருக்கு சினிமாவின் மீது எந்த அளவுக்கு காதல் இருக்கும்? ஒரு பெண் நடிக்க வந்தால் அவரை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அப்பா கூறுவார். அதிதி, மருத்துவம் படித்துவிட்டு இத்துறையை தேர்ந்தெடுத்துள்ளார். அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

மேலும்