ஹிட் ஆக வேண்டுமென்று நான் வேலைகள் பார்க்கவில்லை. நல்ல பாடல்கள் கொடுக்க வேண்டும் என்றுதான் வேலை பார்த்துள்ளேன் என்று விருமன் பட விழாவில் யுவன்சங்கர் ராஜா பேசியுள்ளார்.
மதுரையில் 'விருமன்' பட இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா, கார்த்திக், அதிதி சங்கர், இயக்குநர் பாரதிராஜா, யுவன்சங்கர் ராஜா, முத்தையா, சூரி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.இதில் கலந்துகொண்டு பேசிய இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா விழாவை தனது பேச்சால் கலகலப்பாக்கினார்.
யுவன் தனது பேச்சில், "படத்தின் ரீ-ரெக்கார்டிங் வேலைகள் நடந்து வருகின்றன. நாளைக்குள் அதை முடித்துவிடுவேன். இயக்குநர் முத்தையா சார் உடன் முதன்முதலாக இணைத்துள்ளேன். படம் அருமையாக உள்ளது. கார்த்தி, சூர்யா, நான் எல்லாம் ஒரு குடும்பம் போல்தான். பள்ளியில் ஒன்றாக தான் படித்தோம். பள்ளிப் படிப்பில் தொடங்கி இவ்வளவு தூரம் வந்தது மிகப்பெரிய பயணம்.
பள்ளியில் ஹவுஸ் கேப்டன் சூர்யா தான். நான் எப்போதும் பள்ளிக்கு ஷூ, யூனிபார்ம் ஒழுங்காக அணியாமல் செல்வேன். ஆனால், அவர் பெர்ஃபெக்ட்டாக அணிந்து பள்ளிக்கு வந்து 'யுவன் அவுட்' என்று பள்ளி மைதானத்தில் என்னை ஓடவைப்பார். அன்றைக்கு என்னை ஓடவைத்ததற்கு நிறைய பாடல்கள் கொடுத்து அவரை ஆட வைத்தேன்" என்று கலகலப்பூட்டினார்.
» என்னைவிட சிறந்த நடிகர் கார்த்தி - 'விருமன்' விழாவில் சூர்யா புகழாரம்
» “பிரச்சினைகளை 'ஜெய்பீம்' என தூக்கியெறிந்தார் சூர்யா” - ‘விருமன்’ நிகழ்வில் பாரதிராஜா பேச்சு
முன்னதாக, விழாவுக்கு கைலி வேஷ்டி கெட்டப்பில் யுவன் வந்திருந்ததை தொகுப்பாளர் சுட்டிக்காட்டி கேட்க அதற்கு பதில் கொடுத்தவர், "அதற்கு காரணம் எனது மனைவிதான். மதுரை போவதற்காக இந்த ஆடையை அவர் தான் கொடுத்தார். நானும் ஓகே என்று ஒப்புக்கொண்டேன். இப்போது எந்த போட்டோ ஷூட், நிகழ்ச்சி என்றாலும் எனது மனைவியே உடையை தேர்வு செய்வார். எல்லோரும் மனைவி சொல்லை கேட்டுத்தானே ஆக வேண்டும்" என்றதும் மேடையில் இருந்த இயக்குநர் ஷங்கர், சூர்யா, கார்த்தி உட்பட அனைவரும் சிரித்தனர்.
தனது பேச்சின் முடிவில், மதுரையில் கூடிய விரைவில் இசை நிகழ்ச்சி நடத்துவேன் எனக் கூறி மதுரை ரசிகர்களையும் குஷிப்படுத்தினார்.
முக்கிய செய்திகள்
சினிமா
51 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago