நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மாவீரன்' படத்தில் நாயகியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
'மண்டேலா' பட இயக்குநர் அஸ்வின் மடோனா இயக்கும் புதிய படம் 'மாவீரன்'. இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கிறார். 'டான்' படத்திற்கு பிறகு அவரது நடிப்பில் 'பிரின்ஸ்' திரைப்படம் ரிலீஸுக்காக தயாராக இருக்கிறது. தொடர்ந்து அவர் 'மாவீரன்' படத்திலும் நடிக்க உள்ளார். இந்தப் படம் தமிழ், தெலுங்குவில் பைலிங்குவல் படமாக உருவாகி வருகிறது. தெலுங்கில் இந்தப் படத்திற்கு ‘மாவீருடு’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு 'ஆடை', 'மண்டேலா' ஆகிய படங்களுக்கு இசையமைத்த பரத் ஷங்கர் இசையமைக்கிறார்
படத்தின் நாயகி குறித்து முடிவெடுக்கப்படாத நிலையில், கீரா அத்வானி அல்லது அதிதி ஷங்கர் நடிப்பார்கள் என கூற்றபட்டது. இந்நிலையில், தற்போது படத்தின் நாயகியாக அதிதி சங்கர் நடிப்பார் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. படத்தில் இயக்குநர் மிஷ்கின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிதி ஷங்கரை பொறுத்தவரை அவர் முத்தையா இயக்கும் 'விருமன்' படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படம் வரும் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
» “மக்கள் விழித்துக் கொண்டனர்” - ஆமிர்கான் மீது விஜயசாந்தி ஆவேசம்
» விஜய்யின் ‘வாரிசு’ படப்பிடிப்புக்கு சிக்கல்: பின்புலம் என்ன?
முக்கிய செய்திகள்
சினிமா
44 mins ago
சினிமா
55 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago