'இரவின் நிழல்' படத்துக்காக நடிகர் பார்த்திபனை பாராட்டியுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
'ஒத்த செருப்பு சைஸ் 7' படத்திற்கு பின்னர் பார்த்திபன் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான திரைப்படம் 'இரவின் நிழல்'. வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தை 'அகிரா புரொடக்ஷன்ஸ்' தயாரித்துள்ளது.
ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது 'இரவின் நிழல்'. கிட்டத்தட்ட 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், பார்த்திபனின் முயற்சிக்கு பாராட்டுக்கள் கிடைத்துவருகின்றன.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று நடிகர் பார்த்திபன் உடன் அமர்ந்து 'இரவின் நிழல்' படத்தை பார்த்துள்ளார். பின்னர் படம் குறித்து தனது வலைதள பக்கத்தில், "எதிலும் தனிப்பாணி - அதுதான் இரா.பார்த்திபன்! ஒத்த செருப்பு படத்துக்குப் பிறகு ஒத்த ஷாட் படம்! இரவின் நிழல் படத்தின் தொழில்நுட்பத் திறன், தமிழ்த் திரையுலகின் தொழில்நுட்பத் திறனின் உயரம்! நான் லீனியர் சிங்கிள் ஷாட் படத்தின் மூலம் தான் ஒரு டெக்னாலஜி சீனியர் எனக் காட்டியுள்ள அவருக்கு வாழ்த்துகள்!" என்று பார்த்திபனை பாராட்டியுள்ளார்.
» “அடுத்தப் பட அறிவிப்புடன் வருகிறேன்” - சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக விலகிய லோகேஷ்
» “தேசிய திரைப்பட விருதே இப்போது நகைச்சுவை ஆகிவிட்டது” - அடூர் கோபாலகிருஷ்ணன் சாடல்
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago