ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தை உறுதி செய்த கார்த்திக் சுப்புராஜ்

By செய்திப்பிரிவு

'ஜிகர்தண்டா' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உறுதி செய்துள்ளார். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

கடந்த 2014-ம் ஆண்டு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் நடித்த படம் 'ஜிகர்தண்டா'.சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இப்படத்தில், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் வெளியாகி ரசிகர்களிடையேயும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றிருந்தார் பாபி சிம்ஹா.ஜிகர்தண்டா திரைப்படம் தெலுங்கில் 'கட்டலகொண்டா கணேஷ்' என்ற பெயரில் தெலுங்கிலும், 'பச்சன் பாண்டே' என்ற பெயரில் இந்தியிலும், 'ஜிகர்தண்டா' என்ற பெயரில் கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், படம் வெளியாகி 8 ஆண்டுகள் கடந்த சூழலில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியிருப்பதையும், அதற்கான எழுத்துப்பணிகள் நடைபெற்று வருவதையும் குறிப்பிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். படத்தில் நடிக்கும் நடிகர்கள் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

21 mins ago

சினிமா

22 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்