'திருச்சிற்றம்பலம்' ஆடியோ வெளியீட்டு விழா - வீல்சேரில் வந்து கலந்துகொண்ட நித்யா மேனன்

By செய்திப்பிரிவு

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'திருச்சிற்றம்பலம்'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் குடும்ப உறவுகளை மையப்படுத்திய கதை எனக் கூறப்படுகிறது. 'திருச்சிற்றம்பலம்' படத்தில் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், ப்ரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் தனுஷுடன் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிந்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷ் உடன் அனிருத் இணைந்திருப்பதால் ஏற்கனவே இந்தப் படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இதையடுத்து படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று நடைபெற்றது. இதில், நடிகை நித்யா மேனன் வீல் சேரில் வந்து கலந்துகொண்டார். கடந்த ஒரு மாதாகவே, வீல் சேரில் இருந்தபடி இருக்கிறார். கணுக்கால் காயம் காரணமாக, அவரால் நடக்க முடியவில்லை. படியில் இருந்து தவறி விழுந்ததால் கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட, அதன்பிறகு சில நாட்கள் வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் நடந்துவந்தார்.

சில நாட்கள் முன் தனது காயம் தொடர்பாக பேசிய நித்யா மேனன், "எனது கணுக்கால் நன்றாக இருக்கிறது. நான் இப்போது நடக்க ஆரம்பித்துவிட்டேன். என் எடையை என்னால் சுமக்க முடிகிறது." என்று பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் தான் திருச்சிற்றம்பலம் ஆடியோ வெளியீட்டு விழாவில் வீல்சேரில் வந்து கலந்துகொண்டார். இந்தப் புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்