ஆகஸ்ட் 12ல் வெளியாகும் கார்த்தியின் விருமன்

By செய்திப்பிரிவு

விருமன் படம் ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாகும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் 'விருமன்'. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார். தவிர, பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு தேனி மற்றும் மதுரை வட்டாரங்களில் நடைப்பெற்றது.

'கொம்பன்' படத்திற்கு பிறகு ஆறு ஆண்டுகள் கழித்து 'விருமன்' படத்தின் மூலம் முத்தையா - கார்த்தி கூட்டணி இணைந்துள்ளனர் என்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதற்கேற்ப, அண்மையில் வெளியான இந்தப் படத்தின் "காஞ்ச பூ கண்ணால..." பாடலின் ப்ரோமோ வீடியோ நல்ல வரவேற்பை பெற்றது.

'விருமன்' படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிந்துள்ள நிலையில் இசை வெளியீட்டு விழா ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. மதுரையில் இந்த விழா நடக்கவுள்ளது. முன்னதாக, படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தார் படத்தின் தயாரிப்பாளர் சூர்யா.

தற்போது இந்த படம் வரும் 12ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய போஸ்டர் மூலம் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர். இதே தேதியில் விஷாலின் லத்தி படமும் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 mins ago

சினிமா

21 mins ago

சினிமா

55 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

மேலும்