துப்பாக்கிச்சுடும் போட்டியில் கலந்துகொள்ள திருச்சி வந்திருந்த அஜித், ரசிகர்களுக்கு கையசைத்து, வணக்கம் தெரிவிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
47-வது மாநில துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 25-ம் தேதி திருச்சி கே.கே.நகரில் உள்ள ரைபிள் கிளப்பில் தொடங்கியது. இதில் தமிழகம் முழுவதுமிருந்து 1,300-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர். பிஸ்டல் துப்பாக்கிச் சுடுவதற்கான போட்டிகள் 28-ம் தேதி வரையும், 29, 30, 31-ம் தேதி வரை ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, துப்பாக்கிச் சுடும் போட்டியில் ஆர்வம் காட்டி வரும் அஜித், இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக இன்று காலை திருச்சி வந்தார். இதனால், போட்டி நடைபெறும் இடத்தில் அஜித்தைக் காண ரசிகர்கள் அதிக அளவில் திரண்டனர். தமிழகம் முழுவதிலிருந்தும் கிளம்பி திருச்சிக்கு வந்த ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறினர். இந்நிலையில், மாடியிலிருந்து ரசிகர்களை நோக்கி நடிகர் அஜித் கைகாட்டி வணக்கம் வைப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
» செல்வராகவன் - தனுஷ் இணையும் ‘நானே வருவேன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
» “இதுபோன்ற காதல் கதையில் நடித்ததில்லை” - ‘சீதா ராமம்’ குறித்து துல்கர்
'ஏகே61' படத்தின் ஷீட்டிங்கில் பிசியாக இருந்த அஜித் தற்போது ஒரு இடைவெளிக்கு பின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் விரைவில் கலந்துகொள்வார் என கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago