கமல்ஹாசன் தயாரிப்பில் நாயகனாக நடிக்கும் உதயநிதி ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாக உள்ள புதிய திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்க உள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழ் திரைத்துறையில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளராக என்ட்ரி கொடுத்தவர் உதயநிதி. தொடர்ந்து ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். பின்னர் தொடர்ச்சியாக பல படங்களில் அவர் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

மறுபக்கம் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படத் தயாரிப்பு மற்றும் திரைப்பட வெளியீட்டு பணிகளையும் கவனித்து வருகிறார். அண்மையில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ படத்தை வெளியிட்டிருந்தார். இந்தப் படத்தை கமல்ஹாசன் ‘ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ நிறுவனத்தின் சார்பில் தயாரித்திருந்தார்.

இந்நிலையில், உதயநிதியை நாயகனாக வைத்து ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் புதிய திரைப்படம் ஒன்றை கமல்ஹாசன் தயாரிக்கிறார். இதனை உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் படம் இப்போதைக்கு ‘புராடக்‌ஷன் #54’ என அறியப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்