தமிழ்நாட்டில் அதிக வரி செலுத்தும் நடிகரான ரஜினிகாந்திற்கு வருமான வரி தினத்தையொட்டி விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருது ரஜினி சார்பில் அவரது மகள் ஐஸ்வர்யா பெற்றுக்கொண்டார்.
வருமான வரி தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பான நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் தமிழ்நாட்டில் அதிக வரி செலுத்தும் நடிகரான ரஜினிகாந்திற்கு விருது அறிவிக்கப்பட்டது. அதன்படி, நடிகர் ரஜினி சார்பாக அவரது மகள் ஐஸ்வர்யா ரஜனிகாந்த் இந்த விருதைப் பெற்றுக்கொண்டார். அதேபோல தவறாமல் வருமான வரி செலுத்துபவர்களும் இந்த அரசு விழாவில் பாரட்டப்பட்டனர். நடிகர் ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
» ஆன்லைன் ரம்மி விளம்பரத்தால் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் வருந்துகிறேன் - மலையாள நடிகர் லால்
» நயன்தாரா நம்பர் ஒன் நடிகை இல்லையா? - சர்ச்சையை ஏற்படுத்திய கரண் ஜோஹர்
முக்கிய செய்திகள்
சினிமா
14 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago