சென்னை: தேசிய விருதுகளை வென்ற மூன்று தமிழ் திரைப்பட குழுவிற்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
68-வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான பட்டியலில் சிறந்த நடிப்பு, இயக்கம், திரைக்கதை, வசனம், சிறந்த திரைப்படம், சிறந்த தமிழ்ப் படம், சிறந்த உறுதுணை நடிப்பு, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த படத்தொகுப்பு உள்ளிட்ட விருதுகளை சூரரைப்போற்று, மண்டேலா மற்றும் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் என மூன்று தமிழ் திரைப்படங்கள் விருதுகளை வென்று அசத்தியுள்ளன.
இந்நிலையில், தேசிய விருதுகளை வென்ற மூன்று தமிழ் திரைப்பட குழுவிற்கும் வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “68-வது தேசிய திரைப்பட விருதுகளைக் குவித்துத் தமிழ்த் திரை உலகுக்குப் பெருமை சேர்த்துள்ள தம்பி சூர்யா, சுதா கொங்கரா, ஜி.வி. பிரகாஷ்குமார், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட சூரரைப் போற்று படக்குழுவினருக்கும்.
இயக்குநர் வசந்த், இலட்சுமி பிரியா சந்திரமவுலி, ஸ்ரீகர் பிரசாத் உள்ளிட்ட சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படக்குழுவினருக்கும், மடோன் அஸ்வின், யோகிபாபு உள்ளிட்ட மண்டேலா படக்குழுவினருக்கும் எனது பாராட்டுகள்!
» தமிழகத்தில் குரூப் 4 தேர்வு: 7300 இடங்களுக்கு 22 லட்சம் பேர் போட்டி
» கண்வலி கிழங்கிற்கு ஆதார விலை: மத்திய அரசுக்கு தமிழக விவசாயிகள் வலியுறுத்தல்
அனைத்து விருதாளர்களுக்கும் வாழ்த்துகள்! சமூகப் பொறுப்புணர்வு மிகுந்த முற்போக்கான படைப்புகள் திரையை ஆளட்டும்!” என தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
முக்கிய செய்திகள்
சினிமா
20 mins ago
சினிமா
31 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago