''கும்பளங்கி நைட்ஸ்' படத்தில் தனுஷ் நடிக்க வேண்டியதாக இருந்த கதாபாத்திரத்தில் தான் நான் நடித்தேன்'' என்று நடிகரும் அப்படத்தின் தயாரிப்பாளருமான ஃபஹத் பாசில் தெரிவித்துள்ளார்.
மது ஸ்ரீநாராயணன் இயக்கத்தில் ஷ்யாம் புஷ்கரத்தில் எழுத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியானது 'கும்பளங்கி நைட்ஸ்' திரைப்படம். இப்படத்தில், ஃபஹத் பாசில், சௌபின் ஷகீர், ஷான் நிகாம், ஸ்ரீநாத் பாஸி, அன்னா பென், தமிழ் நடிகர்கள் ரமேஷ் திலக், ஷீலா ராஜ்குமார் என பெரிய பட்டாளமே நடித்திருந்தது.
படத்தை ஃபஹத் பாசிலுடன் இணைந்து திலேஷ்போத்தனும், ஷ்யாம் புஷ்கரனும் தயாரித்திருந்தனர். ரூ.6 கோடியில் உருவாக்கப்பட்ட இப்படம், பாக்ஸ்ஆஃபிஸில் 39 கோடி வரை வசூலித்து, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப்படத்தில் ஷம்மி கதாபாத்திரத்தில் நடிகர் ஃபஹத் பாசில் நடித்திருப்பார். இந்த கதாபாத்திரத்தில் தொடக்கத்தில் தனுஷ் நடிக்க இருந்ததாக அவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
» சென்னை திரும்பிய இளையராஜா விரைவில் மாநிலங்களவை நியமன உறுப்பினராக பதவியேற்பு
» பா.ரஞ்சித் உள்ளிட்ட 4 இயக்குநர்கள் இயக்கத்தில் வெளியானது 'விக்டிம்' ஆந்தாலஜி ட்ரெய்லர்
அவர் அளித்த பேட்டியின் ஒரு பகுதியில், ''கும்பளாங்கி நைட்ஸ் படத்தில் நான் நடித்த கதாபாத்திரம் நடிகர் தனுஷ் நடிக்க வேண்டியது. தொடக்கத்தில் அவரை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால், அப்போது பட்ஜெட் காரணமாக தனுஷை படத்தில் நடிக்க வைக்க முடியவில்லை. அதனால் இறுதியில் நானே நடிக்க வேண்டியிருந்தது. நான் தயாரிக்கும் படங்களில் காஸ்டிங் மிகவும் முக்கியம் என கருதுவேன்'' என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
57 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago