இயக்குநர் ஏ.எல்.விஜய் உடன் நடிகர் அருண் விஜய் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2007-ம் ஆண்டு வெளியான அஜித்தின் 'கீரிடம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாவனர் ஏ.எல்.விஜய். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைத் தழுவி கடந்த ஆண்டு 'தலைவி' படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்திருந்தார்.
இந்நிலையில், அவர் தற்போது அடுத்ததாக இயக்க உள்ள புதிய படத்தில் நடிகர் அருண் விஜய் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்த 'யானை' திரைப்படம் அண்மையில் வெளியானது. இதையடுத்து அவர் ஏ.எல்.விஜயுடன் இணைய உள்ளதாகவும், படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படம் இங்கிலாந்து, லண்டன் பகுதியில் படமாக்கப்பட உள்ளதாகவும், அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்பபடுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago