நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் காலமானார். அவருக்கு வயது 69. 1980-களில் ஆரம்பித்து மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தியில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பிரதாப் போத்தனின் மறைவுக்கு, அவருடைய ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் இரங்கலையும் நினைவுகளையும் பதிவு செய்து வருகின்றனர். அந்தத் தொகுப்பில் இருந்து...
ஜான்சன் ஜோ ரோமர்ர்: நடிகரும், இயக்குநருமான பன்முகத் திறமையாளர். பிரதாப் போத்தன் அவர்கள் மறைவு ரசிகனாக எனக்கு மிகுந்த வேதனை தருகிறது. அவர் ஆத்மா இறைவனின் நிழலில் இளைப்பாற வேண்டுகிறேன்.
srivatsparam29: அழியாத கோலங்களும் பன்னீர் புஷ்பங்களும் மூடுபனியும் இன்றளவும் மனதில் நீங்கா நினைவுகள்... அஞ்சலி... பிரதாப் போத்தன்.
மாதொருபாகன்: சிறந்த நடிகர்.. இயக்குநர்.. பிரதாப் போத்தன்..
» கரோனா சிகிச்சை: முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி
» தமிழக முதல்வர் ஸ்டாலின் வேகமாக குணமடைந்து வருகிறார்: மருத்துவமனை அறிக்கை
HotBhai
நான் மிகவும் விரும்பும்..
நடிகர் இயக்குநர்..
தயாரிப்பாளர்..
பிரதாப்போத்தன்.."80"களின்..
நாயகன்..
Balamurugan: பிரதாப் போத்தன் ஒரு சிறந்த நடிகர், திரைகதை ஆசிரியர், நல்ல இயக்குநர். அவர் பாலுமகேந்திரா இயக்கத்தில் நடித்தப் படங்கள், ஆவாரம் பூ முதலில் மலையாளத்தில் வந்தது. அந்த நடிப்பெல்லாம் அபாரம்...
அசுரகவி: தனது திரைப் பயணத்தை முடித்துகொண்டார் பிரதாப் போத்தன்.
Wolfrik: அவர் நல்ல இயக்குநர் என்பதை எக்காலமும் சொல்லிக்கொண்டே இருக்கும்.
Ramaseshan KS: பிரதாப் போத்தன் அவர்களுக்கு அஞ்சலி. திரையுலகம் தூக்கி குப்பையிலிட்ட மாணிக்கங்களுள் அவரும் ஒருவர்!
Vasan MSV: இளையராஜாவின் பாடல்களை காட்சியாக தருவதில் தலைசிறந்த இயக்குநர் பிரதாப் போத்தன் தான். அந்த இசைக்கு ஏற்ப காட்சிகள், சூழல், வண்ணங்கள், புதுமைகள் என்று மிரட்டி இருப்பார். மை டியர் மார்த்தாண்டா ஒரு அருமையான fantasy ஒவ்வொரு பாடலும் அவ்வளவு அழகாக படமாக்கப்பட்டிருக்கும். Miss Him.
Ashok R: பிரதாப் போத்தனை நம்மூரில் பெரும்பாலும் 'சைக்கோத்தனமான' கதாப்பாத்திரங்களில் நடிப்பவர் என்ற அளவிலேயே தெரியும். ஆனால் அவர் மிகச்சிறந்த இயக்குனர். எனக்கு மிகவும் பிடித்த இயக்குனராக அவர் பெயரைப் பல இடங்களில் சொல்லியிருக்கிறேன். அவர் எடுத்த படங்களின் பட்டியலைப் பாருங்கள். ...
Geetha Narayanan: ரொம்ப நாடகீயமான தமிழ் சினிமா தன் இயல்பு மாறிய 80களுக்கு பல முகங்கள். அதில் ஒன்று பிரதாப் போத்தன். இன்னும் நெஞ்சத்தைக் கிள்ளாதே, பன்னீர் புஷ்பங்கள், மூடு பனி, அழியாத கோலங்கள், கரையெல்லாம் செண்பகப் பூ, மீண்டும் ஒரு காதல் கதை எல்லாம் முக்கியப் படங்கள்தான். இப்போது பூ வண்ணம் போல நெஞ்சம் என்ற சலீல் சௌத்ரியின் பாடலை நினைத்துக் கொள்கிறேன். Rest in Peace Peathap Pothen!
Shahjahan R
· I think in art, but especially in films, people are trying to confirm their own existences - Jim Morrison
நேற்று பிரதாப் போத்தன் எழுதிய கடைசிப் பதிவு நீங்கள் முயற்சி செய்தீர்களோ இல்லையோ தெரியாது. ஆனால். நீங்கள் எங்கள் மனங்களில் நிலைத்திருப்பீர்கள் Pratap Pothen.
James David
மீண்டும் ஒரு காதல் கதை, வெற்றி விழா, ஜீவா, மைடியர் மார்த்தாண்டன், ஆத்மா படங்களின் ஸ்டைலிஷ் மேக்கிங் இயக்குநர், தனித்துவமான நடிகர். பிரதாப் போத்தன். REST IN PEACE...!
Bala R Ganesh
இது ஒரு மோசமான நாள்.
Ezhumalai Venkatesan: The Bourne Identity நாவலை ஹாலிவுட் படம் எடுக்கும் முன்பே தமிழுக்கு அழகாக திரைக்கதை அமைத்து வெற்றி விழா என்ற பெயரில் கமலை வைத்து கதகளியே ஆடியவர் இயக்குனர் அவதாரத்தை எடுத்த நடிகர் பிரதாப் போத்தன்.
மூடுபனி, அழியாத கோலங்கள் நெஞ்சத்தைக் கிள்ளாதே என நடிகர் பிரதாப்பின் திரைமொழி மிகவும் வித்தியாசமாக இருந்தது.
பிரதாப் நடித்த படத்தில் நமக்கு மறக்க முடியாத ஒன்று தகரா. பரதன் இயக்கத்தில் உருவான மலையாள படமான தகரா தமிழில் ஆவாரம்பூ என வெளிவந்து வினீத் நடித்திருந்தார்.
பிரதாப் என்றாலே நினைவுக்கு வருவது கையில் கிட்டார் வைத்துக்கொண்டு, "என் இனிய பொன் நிலாவே என்று பாடுவாரே" அந்த காட்சிதான். 70வது வயதில் இன்று காலை உடல்நலக்குறைவால் பிரதாப் போத்தன் காலமாகிவிட்டார்.
Perumal Karuppaiah: பிரதாப் என்றாலே எனக்கு வறுமையின் நிறம் சிவப்பு தான் ஞாபகம் வரும். 50+ முறை பார்த்த படம். இவருக்காகவே சில முறை பார்த்திருக்கிறேன். ஆழ்ந்த இரங்கல்கள்!
Ma Tholkappiyan:
வருந்துகிறேன்!
நடிகர் பிரதாப் போத்தன் மறைந்தார்!
சில நடிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய திறன் போதுமான அளவுக்கு பயன்படுத்தப்படவில்லை எனும் உணர்வு நமக்கு இருந்துகொண்டே இருக்கும். அத்தகைய ஒரு நடிகர்தான் பிரதாப். அவர் இன்னும் இன்னும் நிறைய பயனபடுத்தப்பட்டு இருந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் என்னிடம் எப்போதுமே இண்டு.
‘வறுமையின் நிறம் சிவப்பு’ படத்தில் அவரது நடிப்பும், ‘வெற்றி விழா’ படத்தில் அவரது இயக்கமும் எனக்குள் ஏற்படுத்திய வியப்பில் இருந்து நான் இன்னுமே மீளவில்லை!
பிரதாப் போத்தனுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்!
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago