சந்தானம் நடிக்கும் 'குலுகுலு’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
'மேயாத மான்', 'ஆடை' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ரத்னகுமார். விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த 'மாஸ்டர்' படத்துக்கு இயக்குநர் லோகேஷுடன் இணைந்து திரைக்கதை, வசனம் எழுதியிருந்தார். இந்நிலையில், அவரது இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படம் 'குலுகுலு'.
இந்தப் படத்தில், அதுல்யா சந்திரா, நமிதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, லொள்ளு சபா மாறன், லொள்ளு சபா சேஷு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சர்கள் பாக்ஸ் நிருவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். விஜய் கார்த்திக் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்நிலையில் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
ஒரு ஜாலியான கலகலப்பு சினிமாவாக உருவாகியிருக்கும் படத்தின் டீசரை பொறுத்தவரை, பரட்டை தலையும், தாடியுமாக இன்ட்ரோ கொடுக்கிறார் நடிகர் சந்தானம். வெயிட்டான வில்லன் ஒருவர் எப்போதும் புகைத்தபடியே வந்து செல்கிறார். ஜாலியான படத்தின் நடுவே துப்பாக்கி சத்தங்களும் ஒலிக்கிறது.
» “சில நேரங்களில் இப்படி நடக்கும்” - ஷாருக்கான் படத்தில் இருந்து விலகிய ஒளிப்பதிவாளர்
» 'என்னை விட ஐஸ்வர்யா ராய் அதிக சம்பளம் வாங்கினார்' - ப்ரித்விராஜ்
'சுத்தி கோமாளிய வைச்சுக்கிட்டா முட்டாள் கூட அறிவாளியாத்தான் தெரிவான்' என்ற வசனம் படத்தின் கதைக்கருவை ஒன்லைனில் சொல்வதைப்போல தெரிகிறது.
ஒரு கடத்தல் காரனிடமிருந்து கடத்தப்பட்டவரை மீட்க செல்லும் சந்தானம் அதில் வென்றாரா இல்லையா என்பதை மையமாக வைத்து ஜாலியாக உருவாகியிருக்கும் படைப்பாக காட்சியளிக்கிறது 'குலுகுலு' படத்தின் டீசர். படம் ஜூலை 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.