விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகிறது மிஷ்கினின் பிசாசு 2

By செய்திப்பிரிவு

மிஷ்கின் இயக்கியுள்ள 'பிசாசு 2' திரைப்படம் விநாயகர் சதூர்த்தியான ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான 'பிசாசு' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப்போவதாக மிஷ்கின் அறிவித்திருந்தார். தற்போது படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி முடித்துள்ளார் மிஷ்கின்.

ஆண்ட்ரியா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி ,சந்தோஷ் பிரதாப், அஜ்மல், பூர்ணா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்தன. அடர்ந்த காட்டுப் பகுதிகளில் சில முக்கியக் காட்சிகளைப் படமாக்கியுள்ளார் மிஷ்கின்.

இந்நிலையில் படம் எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு, தற்போது அது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'பிசாசு 2' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'விருமன்' படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

13 mins ago

சினிமா

36 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

மேலும்