ஜூலை 15-ல் வெளியாகும் பஹத் பாசிலின் நிலை மறந்தவன்

By செய்திப்பிரிவு

தர்மா விஷுவல் கிரியேஷன்ஸ் சார்பில் ஜூலை 15-ல் தமிழில் வெளியாக இருக்கும் படம் ‘நிலை மறந்தவன்’.

இந்தப் படத்தில் மலையாளத்தில் இளம் முன்னணி நடிகராகவும் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வில்லனாகவும் நடித்துவரும் நடிகர் பஹத் பாசில் கதாநாயகனாக நடித்துள்ளார். பஹத் நடிப்பில் வெளிவந்த புஷ்பா மற்றும் விக்ரம் படங்களின் வெற்றிக்கு பிறகு இப்படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

மலையாளத்தில் 'ட்ரான்ஸ்' என்கிற பெயரில் வெளியாகி வெற்றி பெற்றதன் தமிழ் மொழிபெயர்ப்பே 'நிலை மறந்தவன்' என்கிற பெயரில் வெளியாக இருக்கிறது. பஹத் பாசிலின் மனைவியுமான நடிகை நஸ்ரியா நசீம், வில்லன்களாக இயக்குனர் கவுதம் மேனனும் அவருடன் கோலிசோடா-2, விக்ரம் படத்தில் நடித்த செம்பான் வினோத், திமிரு படத்தில் நடித்த விநாயகன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

உஸ்தாத் ஹோட்டல் என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கியவரும் பிரேமம் போன்ற படங்களை தயாரித்தவருமான பிரபல மலையாள இயக்குனர் அன்வர் ரஷீத் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

24 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

23 hours ago

மேலும்