நடிகர் யோகிபாபு மற்றும் ஓவியா நடிக்கும் 'பூமர் அங்கிள்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் யோகிபாபு. அவர் தற்போது சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில், இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கும் புதிய படத்திலும், 'ஏ1', 'பாரீஸ் ஜெயராஜ்', போன்ற படங்களை இயக்கிய ஜான்சன் இயக்கும் 'மெடிக்கல் மிராக்கல்' படத்திலும் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் இயக்குநர் ஸ்வதீஸ் இயக்கத்தில் யோகிபாபு நடிக்கும் புதிய படம் 'பூமர் அங்கிள்'. இந்தப் படத்தின் தலைப்பு தொடக்கத்தில் 'கான்டிராக்டர் நேசமணி' என்று தான் வைக்கப்பட்டிருந்தது.
» தமிழகம் முழுவதும் 800 திரையரங்குகளில் வெளியாகும் ‘தி லெஜண்ட்’
» வெளியானது பா.ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ ஃபர்ஸ்ட் லுக்
நடிகர் வடிவேலு திரைத்துறைக்கு திரும்பிய பிறகு, அவர் மீது கொண்ட மரியாதையின் காரணமாக படத்தின் டைட்டிலை 'பூமர் அங்கிள்' என மாற்றியதாக இயக்குநர் தெரிவித்திருந்தார். அன்பு மற்றும் கார்த்திக் கே தில்லை தயாரிக்கும் இப்படத்திற்கு தர்மபிரகாஷ் இசையமைத்துள்ளார். யோகிபாபுவுடன் ஓவியாவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
90ஸ் கிட்ஸ்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து இப்படம் பேசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்தப் போஸ்டரை சிபிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த போஸ்டரில் யோகிபாபு கையில் துப்பாக்கியுடனும், ஓவியா சூப்பர் ஹீரோ கெட்டப்பிலும் இடம்பெற்றுள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago