அஜித் நடிக்கும் 'ஏகே61' படத்தின் முதல் பார்வையை நடிகைஸ்ரீதேவியின் பிறந்த நாளான ஆகஸ்ட் 13-ம் தேதி வெளியிட தயாரிப்பாளர் போனிகபூர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஹெச்.வினோத்துடன் மூன்றாவது முறையாக நடிகர் அஜித் கைகோத்திருக்கும் படம் 'ஏகே61'. இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிரமாண்ட செட் அமைக்கப்பட்ட முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
வங்கிக் கொள்ளையை அடிப்படையாக கொண்டு க்ரைம் - த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
'ஏகே 61' படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், படம் இந்த தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
» ராம்குமார் - விஷ்ணு விஷால் மூன்றாவது முறையாக இணையும் ‘ராட்சசன் 2’?
» கங்கனா ரனாவத்துடன் பணியாற்றியது மிகப் பெரிய தவறு: இயக்குநர் ஹன்சல் மேத்தா
அஜித் நடிக்கும் இப்படத்தில் மஞ்சு வாரியர், வீரா, ஜான் கொக்கன், மகாநதி சங்கர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். முன்னதாக ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து நடிகர் அஜித்துடன் ரசிகர்கள் எடுத்துள்ள புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகின.
இந்நிலையில், இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டரை வருகிற ஆகஸ்ட் 13-ஆம் தேதி வெளியிட தயாரிப்பாளர் போனி கபூர் திட்டமிட்டுள்ளாராம். அன்றைய தினம் நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாள் என்பதால் போனி கபூர் இந்த முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
44 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago