ஓடிடி தளங்களின் தாக்கம் ஏற்படுத்திய எதிரொலி காரணமாக சிறு மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்களைக் காண திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தயாரிப்பாளர் சி.வி.குமார் தெரிவித்துள்ளார்.
'அட்டக்கத்தி', 'பீட்சா', 'சூது கவ்வும்' 'தெகிடி' உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். தவிர, கடந்த 2017-ம் ஆண்டு வெளியான 'மாயவன்', 2018-ல் வெளியான 'கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்' உள்ளிட்ட படங்களை இயக்கியும், விஜய் சேதுபதியின் 'க.பெ.ரணசிங்கம்' படத்தில் நடித்தும் இருக்கிறார்.
சிறு பட்ஜெட் படங்கள் குறித்து பேசி வரும் இவர், தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில், ஓடிடியால் சிறு மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
» ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன்... - கவனம் ஈர்க்கும் ‘பொன்னியின் செல்வன்’ போஸ்டர்கள்
» “யாரையும் புண்படுத்த அப்படிச் சொல்லவில்லை” - ஆர்ஆர்ஆர் பட சர்ச்சை குறித்து ரசூல் பூக்குட்டி
இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், ''விக்ரம் படத்திற்கு பிறகு ஜூலை 1-ம் தேதி வரை திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் எதுவும், அதன் அச்சு மற்றும் விளம்பர செலவுகளை கூட வசூலிக்கவில்லை என்று தெரிகிறது.
திரையரங்குகளில் சிறிய மற்றும் நடுத்தர பட்ஜெட் திரைப்படங்களுக்கான பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதற்கு ஓடிடி தளங்களின் தாக்கம் அதிகரித்துள்ளதே காரணம்'' என்று பதிவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago