நடிகர் நாசரின் உடல்நிலை காரணமாக அவர் நடிப்பதை நிறுத்தப்போகிறார் என பரவிய வதந்திகளுக்கு அவரது மனைவி கமீலா நாசர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ட்விட்டரில் அதற்கான விளக்கத்தை அவர் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகராக வலம் வருபவர் நடிகர் நாசர். தவிர, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான 'ஹாஸ்டல்' திரைப்படத்தில் அவரது நடிப்பு பலரையும் ஈர்த்தது. தொடர்ந்து 'வாய்தா' படத்தில் வழக்கறிஞராக நடித்திருந்தார். இதனிடையே தனது உடல்நிலை காரணமாக நாசர் இனி நடிக்கப்போவதில்லை போன்ற வதந்திகள் பரவியுள்ளன.
இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு நாசரின் மனைவி கமீலா நாசர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ள அவர், ''நாசரின் உடல்நிலை குறித்தும், அவர் இனி நடிக்க மாட்டார் என்றும் இன்னும் ஏராளமான வதந்திகள் பரவுகின்றன.
இதனை தொடக்கி வைத்தவர் நீண்ட நாட்கள் வாழ்ந்து இன்னும் பலர் குறித்து கதைகளை கட்டவிழ்த்துவிடட்டும். நாசர் சினிமாவை தான் சுவாசிக்கிறார்.. அது தான் அவரது உணவு. அக்கறை காட்டிய நண்பர்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றி. தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்'' என்று பதிவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
16 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago