’வாழ்க்கை மிகவும் கொடுமையானது’ - மீனா கணவர் இறப்புக்கு திரையுலகம் இரங்கல்

By செய்திப்பிரிவு

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் இறப்புக்கு திரையுலகினர் பலரும் தங்கள் இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.

குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமானவர் நடிகை மீனா. பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அவர், பின்னர் அவர் ஹீரோயின் ஆனார். நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய காந்த், பிரபு முதல் அஜித், விஜய் வரை முன்னணி நாயகர்களுடன் உடன் ஜோடி சேர்ந்து நடித்த மீனா, 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவரது கணவர் வித்யாசகர் நுரையீரல் பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்றுவந்தார்.

நேற்று இரவு அவரது உடல்நிலை மோசமானது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 7 மணிக்கு அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 48. அவரது உடல் இன்று மதியம் 2 மணிக்கு பெசன்ட் நகர் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில், வித்யாசாகர் உடலுக்கு திரைத்துறையினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இது தொடர்பாக நடிகர் சரத்குமார், தனது ட்விட்டர் பக்கத்தில், ''நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகரின் அகால மறைவு செய்தி அதிர்ச்சியளிக்கிறது, மீனா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எங்கள் குடும்பத்தின் ஆழ்ந்த அனுதாபங்கள், அவரது ஆத்மா சாந்தியடையட்டும்'' என்று பதிவிட்டுள்ளார்.

தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், ''வித்யாசாகர் காருவின் மறைவு மிகுந்த வருத்தமும் அதிர்ச்சியும் அளிக்கிறது. மீனா காருக்கும் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்! இதை கடந்து செல்ல அவர்களுக்கு முழு பலம் கிடைக்க பிரார்திக்கிறேன்'' என பதிவிட்டுள்ளார்.

நடிகர் விஷால் தனது ட்விட்டரில், ''நடிகை மீனாவின் கணவர் மறைந்தார் என்ற செய்தி மிகவும் வருத்தமாக உள்ளது.மீனாவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். நீங்கள் வலுவாக இருக்கட்டும் மற்றும் அவரது கணவரின் ஆன்மா சாந்தியடையட்டும்'' என்று தெரிவித்துள்ளளார்.

ஜெயம் ரவி, ''என் நண்பன் சாகர். நீங்கள் மிகவும் தைரியமாக போராடினீர்கள். மீனா மற்றும் நைனிகாவிடம் இந்த இழப்பிலிருந்து மீண்டு வர எங்கள் எங்கள் பிரார்த்தனைகள் துணை நிற்கும்'' என பதிவிட்டுள்ளார்.

நடிகை குஷ்பு, ''ஒரு பயங்கரமான செய்தியை கேட்டு விழித்தேன். நடிகை மீனாவின் கணவர் சாகர் நம்மிடையே இல்லை என்பதை அறிந்து மனம் உடைந்தது. நீண்ட நாட்களாக நுரையீரல் நோயால் அவதிப்பட்டு வந்தார். வாழ்க்கை கொடுமையானது. துக்கத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்'' என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் நடிகர் ரஜினிகாந்த் நடிகை மீனா இல்லத்திற்கு நேரில் சென்று அவரது கணவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

54 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

மேலும்