இதுதான் நான் 27: வீட்டு சாப்பாடு!

By பிரபுதேவா

ராஜு டான்ஸ் மாஸ்டரா இருக்கிற படத்தோட ஹீரோயின்ஸ் எல்லாம் என்னை பார்க்குறப்ப ‘‘உங்க அண்ணன் ராஜு டான்ஸ் மூவ் மென்ட்ல ஏதாச்சும் தப்பு பண்ணினா நேரா நறுக்குனு சொல்லிடுறாரு’’ன்னு கம்ப்ளைய்ன்ட் பண்ணியிருக்காங்க. திரும்பவும் அதே ஹீரோயின்ஸ் என்னை சந்திக்கிறப்ப ‘‘அப்போ தப்புன்னு சொன்னது நல்லதுதான். இப்போ நான் பெட்டராயிட்டேன். மாஸ்டரை புரிஞ்சிக்கிட்டேன்’’ன்னு சொல்வாங்க. அப்படி சொன்ன அவங்க எல்லாருமே அவனோட நிறைய பாடலுக்கு நடனம் ஆடியிருக்காங்க. அந்தப் பாட்டு சூப்பர் ஹிட்டும் ஆயிருக்கு. பல பேரு இன்றைக்கும் விரும்பி கேட்டு வந்து ராஜுவோட நடன அமைப்புல ஆடிட்டிருக்காங்க. அதுதான் அவனோட ஸ்பெஷல்!

சின்ன வயசுலேர்ந்து இப்போ வரைக் கும் நிறையப் பேர் ‘‘உங்க தம்பி ராஜுவை ஷூட்டிங்ல பார்த்தேன்’’ன்னு சொல்வாங்க. ‘‘அவன் எனக்கு அண் ணன். என்னைவிட 3 வருஷம் பெரிய வன்’’ன்னு சொல்வேன். ‘‘அப்ப டியா?’’ன்னு ஆச்சர்யமா கேட்பாங்க. அதுலயும் நிறையப் பேர் நம்ப மாட்டாங்க.

வீட்டுல நான், ராஜு, பிரசாத்… எங்க மூணு பேருக்கும் அப்போதெல்லாம் சாப்பாட்டு தொடங்கி டிரெஸ், விளையாட்டு, பட்டாசு வரைக்கும் பயங்கர சண்டை நடக்கும். ஆனா, ஜாலியா இருக்கும். இப்போ நாங்க ரொம்ப பிஸியாகிட்டோம். மூணு பேரும் ஒண்ணா கொஞ்ச நேரம் சேருவதே இன்னைக்கு பெரிய விஷயமாப் போச்சு. எப்பவாவது நாங்க ஒண்ணா இருக்கிறதை அம்மா பார்க்குறப்ப, ‘‘சின்ன வயசுல அப்பளத்துக்கு கூட அவ்வளவு பெரிய சண்டை போடுவீங்கடா!’’ன்னு சிரிச்சுக்கிட்டே சொல்வாங்க.

எப்பவுமே ராஜு ரொம்ப ஸ்ட்ராங்கா டான்ஸ் ஆடுவான். நான், பிரசாத், ராஜு மூணு பேரும் சேர்ந்து பரதநாட்டியம் ஆடுவோம். அதுலயும் ராஜுவோட ஸ்டெப்ஸ் அவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்கும். ராஜு நல்லா நடிக்கவும் செய்வான். அவனுக்கு நல்ல காமெடி சென்ஸ் உண்டு. எங்க அப்பா கூட ராஜுவைத்தான் ஹீரோவாக்கணும்னு நினைச்சார். ‘குணா’ படத்துல வர்ற ‘அது என்ன மாயமோ’ங்கிற டயலாக் மாதிரி நான் ஹீரோவாயிட்டேன்.

‘வால்டர் வெற்றிவேல்’ படத்துல வர்ற ‘சின்ன ராசாவே சித்தெறும்பு…’ பாட்டு, ‘ஜென்டில்மேன்’ படத்துல வர்ற ‘சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலு’ன்னு என்னோட பாட்டு டான்ஸ் ஹிட் ஆன மாதிரி, ‘ரோஜா’ படத்துல வர்ற ‘ருக்கு மணி… ருக்குமணி…’ பாட்டுலேர்ந்து ராஜுவோட பல சோலோ பாட்டு டான்ஸ் ஹிட் ஆயிருக்கு. இன்னைக்கு நிறைய மாஸ்டர்ஸ் ரொம்ப நல்லாவே வொர்க் பண்றாங்க. பெரிய ஹோட்டல்ல போய் நாம சாப்பிடுவோம். நல்லா இருக்கும். ஆனா, வீட்டு சாப்பாட்டோட ருசியே தனிதான். ராஜுவோட பாட்டு டான்ஸ் வீட்டு சாப்பாடு மாதிரி! அவனுக்குன்னு ஒரு தனி ஸ்டைல் இருக்கு. ஒரு பாட்டுல இந்த இடத்துல இப்படி ஒரு மார்க் இருக்கணும்னு அவன் திட்டமிட்டு செய்றதில்லை. ஆனா, அந்த பாட்டே அவனோட ஸ்டைலா மாறிடும்.

ஒரு பாட்டோட மூவ்மென்ட்ஸை நான் யோசிக்கிறது ஒரு விதமா இருக்கும். ஆனா, ராஜுவோட பாட்டுல ‘வே ஆஃப் மேக்கிங்’ வரைக்கும் மொத்தமா வேற மாதிரியா இருக்கும். பாட்டுக்கு நானும் நிறைய டான்ஸர்ஸ் பயன்படுத்துவேன். அது ஒரு மாதிரி இருக்கும். அவனும் நிறைய டான்ஸர்ஸ் பயன்படுத்துவான். அது வேற மாதிரி இருக்கும். சில நேரத்துல பெருசா ரிகர்சல் கூட பண்ண மாட்டான். நேரா ஷூட்டிங் போயிடுவான். அந்த பாட்டுங்களும் ஹிட் ஆகிருக்கு.

ராஜு இன்னைக்கு சென்னை ரோட்டுல ஷூட் பண்ணுவான். நாளைக்கு நியூயார்க் ஸ்கொயர்ல ஷூட்டிங்ல இருப் பான். அங்கே இருந்து ராஜ முந்திரிக்கு போவான். அப்படியே அடுத்த நாள் ரஷ்யாவுல இருப்பான். சின்ன பட்ஜெட், பெரிய பட்ஜெட்னு எல்லா விதமான படங்களும் அவங்க அவங்களுக்கு ஏத்த மாதிரி பண்ணுவான்.

சில சமயம் ஒரு படத்துல மத்த மாஸ்டருங்க நாலு பாட்டுக்கு டான்ஸ் பண்ணியிருப்பாங்க. அந்தப் படத்துல இவன் ஒரு பாட்டுக்கு டான்ஸ் அமைச்சிருப்பான். அவங்களோட பாட்டுங்க நல்லா இருந்து, இவன் பண்ணின பாட்டு சுமாரா இருந்தா, ‘‘என்னது… என்னோட ஸாங் சரியா இல்லையே?’’ன்னு ஓப்பனாவே சொல்லிடுவான். அவன்தான் ராஜு!

நானும், ராஜுவும் சேர்ந்து சில படங்கள்லதான் ஒண்ணா வேலை பார்த்திருக்கோம். அப்படி வேலை பண்றப்ப ரெண்டு பேருக்குமே நல்ல புரிதல் இருக்கும். சில சமயம், ‘‘டேய்… இந்த இடத்துல என்னோட இஷ்டத்துக்கு விட்டுடுடா’’ன்னு சொல்வான். நானும் அவன் சொன்ன மாதிரியே விட்டுடுவேன். இன்னும் சொல்லப் போனா நான் இருக்குறதுனால அவன் அவ்வளவா என் படத்துல பண்றதும் இல்லை. இதை எலியும், பூனையுமா நினைச்சிக்காதீங்க. ஒரே இடத்துல ரெண்டு சிங்கம் இருக்கக் கூடாதுல்ல... அப்படி லைட்டா எடுத்துக்கோங்க.

இங்கிலீஷ்ல ஒரு பொன்மொழி இருக்கு. ‘ப்ளெட் இஸ் திக்கர் தென் வாட்டர்’ன்னு. அதுல பெருசா எனக்கு நாட்டம் இல்லை. ஆனா, அது உண்மை! என்னோட மூளைக்கு அது ஏறலைன்னாலும் மனசுக்கு அது கரெக்ட்னுதான் படுது. ஏன்னா, எனக்கு ஒரு கஷ்டம்னா அண்ணன், தம்பி ரெண்டு பேருமே தாங்க மாட்டாங்க. அதே மாதிரி அவங்களுக்கு ஒரு கஷ்டம்னா..? ஏன், அவங்களுக்கு கஷ்டமே வரக் கூடாதுன்னு நான் நெனைப்பேன்.

ராஜு, நான், பிரசாத் நாங்க மூணு பேர். அதே மாதிரி எனக்கும் மூணு பசங்க இருக்கணும்னு நெனைச்சேன். நடந்தது. எல்லாருக்குமே ஒரு அண்ணனோ, ஒரு அக்காவோ இருந்திருந்தா ரொம்ப நல்லா இருக்கும்னு எனக்குத் தோணுது. கண்ணுக்குத் தெரியாம ஒரு பலம் இருக்கும். அது எல்லா தம்பி, தங்கச்சிங்களுக்குமே புரியும். ‘தம்பி உடையான் படைக்கு அஞ்சான்’. ‘அண்ணன் உடையான் எதற்கும் அஞ்சான்’!

அப்பாவுக்கும் என் ஸ்டைலை விட ராஜுவோட கொரியோகிராஃபி ஸ்டைல்தான் ரொம்ப பிடிக்கும்னு நினைக்கிறேன். இன்னைக்கும் நான் அப்படித்தான் நெனச்சிட்டிருக்கேன்.

ஒரு சமயம் என்னோட நண்பரும், ராஜுவோட நண்பரும் ஒண்ணா வேலை பார்த்தாங்க. அப்போ பேச்சுவாக்குல ‘‘பிரபுவைவிட ராஜுதான் பெஸ்ட் மாஸ்டர்’’னு ராஜுவோட நண்பர் சொல்லி யிருக்கார். அதுக்கு என் நண்பருக்கு கோபம் வந்துடுச்சு. அப்புறம் அங்கே என்ன நடந்துச்சுன்னா?

- இன்னும் சொல்வேன்…

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்