ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தினர் தாங்கள் வெளியிட்ட படங்களை ட்விட்டரில் குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்துள்ளனர். அந்தப் பட்டியலில் 'பீஸ்ட்' திரைப்படம் இடம்பெறாதது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இந்தாண்டில் தற்போது வரை தமிழகத்தில் 6 படங்களை வெளியிட்டுள்ளது. 'எப்ஐஆர்', 'பீஸ்ட்', 'காத்துவாக்குல ரெண்டு காதல்', 'டான்', நெஞ்சுக்குநீதி', 'விக்ரம்' உள்ளிட்ட படங்களை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். வரும் நாட்களில் மேலும் சில படங்களை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட்ஸ் மூவிஸ் வெளியிட உள்ளது.
இந்நிலையில், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், 'ரெட் ஜெயண்ட் மூவிஸ் படங்களின் வெற்றிக்கு பின்னாளிலிருந்தவர்கள்' என கூறி, முக்கிய பணியாளர்களின் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதில், ' எஃப்ஐஆர்', 'காத்துவாக்குல ரெண்டு காதல்', 'டான்', 'நெஞ்சுக்கு நீதி', 'விக்ரம்' உள்ளிட்ட படங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
ஆனால், விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்தின் பெயர் இடம்பெறாதது விஜய் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அப்படியென்றால் பீஸ்ட் தோல்வி படமா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
» வெளிநாட்டு பின்னணியில் உருவாகும் ‘புஷ்பா 2’
» தெரிகிறது டாப்ஸியின் உழைப்பு - ‘சபாஷ் மிது’ ட்ரெய்லர் எப்படி இருக்கிறது?
'சன் பிக்சர்ஸ்' தயாரித்த விஜயின் 'பீஸ்ட்' திரைப்படம் முதல் நாள் உலக அளவில் ரூ.60 கோடியை வசூலித்தது. கலவையான விமர்சனத்தை படம் பெற்ற போதிலும், வசூல் ரீதியாக வெற்றிப்படமாக அமைந்துள்ளதாக வர்த்தக ஆய்வாளர்கள் சிலர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago