'பருந்தாகுது ஊர்க்குருவி' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் கோ.தனபாலன் இயக்கத்தில் நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிப்பில் சர்வைவல் திரில்லராக உருவாகி வரும் திரைப்படம் 'பருந்தாகுது ஊர்க்குருவி'. 'வஞ்சகமும் சூழ்ச்சியும் ஒரு போதும் நிலைக்காது' எனும் கருத்தை மையமாக கொண்டு இப்படம் உருவாகிறது.
இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கோ.தனபாலன் இப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார். காயத்திரி ஐயர் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். ராட்சசன் வினோத் சாகர், அருள் சங்கர், கோடங்கி வடிவேல், ராம்தாஸ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பல புதிர்கள் நிறைந்த காட்டுக்குள் இருவர் மாட்டிக்கொள்ளும் சிக்கலான சூழலில், ஒருவர் மற்றொருவரை எப்படி காப்பாற்றுகிறார், அவர்கள் எப்படி உயிர் பிழைக்கிறார்கள் என்பதை ஒரே நாளில் நடக்கும் சம்பவங்களின் அடிப்படையில், சர்வைவல் திரில்லர் பாணியில் சொல்வதே இப்படம். இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். படத்தின் டிரெய்லர், இசை மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago