ஜூன் 21-ல் வெளியாகிறது விஜய் 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

By செய்திப்பிரிவு

விஜய் நடித்து வரும் 'விஜய் 66' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஜூன் 21-ம் தேதி வெளியாகும் என படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தலைப்பிடப்படாத படம் 'விஜய் 66' என அடைமொழியிட்டு அழைக்கப்படுகிறது. தில் ராஜூ தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில், சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். முழுக்க முழுக்க சென்டிமென்ட் கதையாக உருவாக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது.

பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு உருவாகும் இந்தப் படப்பிடிப்பில் முக்கியமான பாடல் மற்றும் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.'விஜய் 66' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இந்நிலையில், வரும் ஜூன் 22-ம் தேதி நடிகர் விஜயின் பிறந்த நாளையொட்டி, அதற்கு முன்னதாக ஜூன் 21-ம் தேதி மாலை 6.01 மணிக்கு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

மேலும்