தமிழ்நாட்டில் கமல் நடித்த 'விக்ரம்' திரைப்படம் 'பாகுபலி' படத்தின் வசூல் சாதனையை முறியடித்து முன்னேறி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது 'விக்ரம்' திரைப்படம். அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருக்கிறார். படம் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
'விக்ரம்' படம் வெளியான முதல் நாள் இந்தியாவில் மட்டும் ரூ.32 கோடியை வசூலித்தது; உலக அளவில் ரூ.48.68 கோடியை எட்டியது. பின்னர், படம் வெளியாகி 3 நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலிதது. உலக அளவில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இந்நிலையில், படம் வெளியாகி 16 நாட்களை கடந்துவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் படம் 150 கோடியை வசூலித்துள்ளது. இதன் மூலம் 'பாகுபலி 2' படத்தின் மொத்த வசூலை 'விக்ரம்' முறியடித்துள்ளது. மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கும் இந்தப்படம் தற்போதுவரை உலக அளவில் ரூ.350 கோடியை நெருங்கியுள்ள நிலையில், விரைவில் ரூ.400 கோடியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
» க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகும் நடராஜனின் கூராய்வு
» பல் வலிக்கு சிகிச்சை பெற்ற நடிகையின் முகம் வீங்கியது - மருத்துவமனை மீது சுவாதி புகார்
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago