'விக்ரம்' வெற்றியை ருசித்துக் கொண்டிருக்கிறார் கமல். நீண்ட நாட்களுக்குப் பிறகு கமலின் திரைப் படைப்புகள் குறித்த விவாதங்கள் மீண்டும் உயிர்பெற்றிருக்கின்றன. கமலுக்கு கைகூடி வருவது க்ளாஸ் படைப்புகளா, காசு வசூல் படங்களா? அவரது அடையாளம் என்ன? - இரு வேறு ரசனை கொண்ட ரசிகர்கள் மாறி மாறி விவாதித்துக்கொள்கின்றன. சொல்லப்போனால் இரண்டிலுமே நீந்தி முத்தெடுத்தவர்தான் கமல்ஹாசன் என்பதை மறுப்பதற்கில்லை. 90-களுக்குப் பிறகான அவரது திரையுலகை க்ளாஸ், காசு ரீதியாக ஒப்பிடுப் பார்ப்போம்.
1990-ம் ஆண்டு வெளியாகிறது கமலின் 'மைக்கேல் மதன காம, ராஜன்' திரைப்படம். சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தை பார்த்து வயிறு வலிக்க சிரித்து ரசித்தவர்களுக்கு, அடுத்த ஆண்டே 'குணா' (1991) என்ற அழுத்தமான திரைக்கதை கொண்ட படத்தை கொடுக்கிறார் கமல். 'குணா' கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் ஆழமாக தேங்கியிருந்த சமயத்தில், (1992) 'சிங்காரவேலன்'-ஆக நம்மை குஷிபடுத்தினார். இரண்டு வகையான சினிமாக்களையும் சம நிலையில் ரசிகர்களுக்கு பரிமாறியவர் கமல்.
1992-ல் 'தேவர் மகன்' 94-ல் 'மகாநதி' இரண்டுமே சீரியஸான புகழ்பெற்ற திரைக்கதை கொண்ட படங்கள். அடுத்து உடனே 1995-ல் 'சதிலீலாவதி' என்ற பக்கா ஜாலியான படம். ஒரு படம் அல்லது இரண்டு படங்கள் காத்திரமான கன்டென்ட் கொண்ட படங்களாக வெளியானதும், அடுத்த படமே ஜாலியான கமர்ஷியல் நகைச்சுவை படங்களை கொடுக்க கமல் ஒருபோதும் தவறியதில்லை. 'குருதிப்புனல்', 'இந்தியன்' படங்களைத் தொடர்ந்து 1996-ம் ஆண்டு 'அவ்வை சண்முகி'-யை கொடுத்து தனது இரு வேறு ரசிகர்களின் ரசனையையும் சமன்படுத்தியவர் கமல்.
» க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகும் நடராஜனின் கூராய்வு
» பல் வலிக்கு சிகிச்சை பெற்ற நடிகையின் முகம் வீங்கியது - மருத்துவமனை மீது சுவாதி புகார்
அவரின் இந்த பேலன்ஸை ஆராய்வது முக்கியமானது. வணிகரீதியாக ஹிட் படங்களைக் கொடுக்காத ஒரு நடிகர் திரையுலகில் நீடிப்பது கடினம் என்பது அவருக்கு தெரியும். அதேசமயம், தான் சார்ந்த, தான் விரும்பும் சினிமாவுக்கான நியாயத்தை சேர்க்கவும், நல்ல சினிமாக்களை வழங்குவதும் ஒரு கலைஞனின் கடமை என்பதையும் அவர் அறிந்தேயிருந்தார். 1998-ல் 'காதலா காதலா'வை நடித்துக்கொடுக்கிறார். அடுத்து 2000-ம் ஆண்டு 'ஹேராம்' எனும் இந்திய சினிமாவை திரும்பி பார்க்கும் படத்தையும் கொடுத்தார். கூடவே அதே ஆண்டு, 'தெனாலி' எனும் வணிக சினிமாவையும் கொடுத்து மகிழ்வித்தார். ஓர் ஆண்டு கமர்ஷியல் ரசிகர்களை திருப்திபடுத்தினால், அடுத்த ஆண்டே சினிமா விரும்பிகளுக்கான க்ளாஸிக் விருந்து படைத்து தான் சார்ந்த திரைத்துறைக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.
2000-க்கு பிறகான கமலின் கரியரை எடுத்துப் பார்த்தால், 'பம்மல் கே சம்பந்தம்' (2002) , 'பஞ்ச தந்திரம்' (2002) ஒரே ஆண்டில் இரண்டு கமர்ஷியல் படங்கள். அடுத்து அழுத்தமான திரைக்கதை கொண்ட 'விருமாண்டி' இயக்கி நடித்தார். 'வசூல் ராஜா எம்பிபிஎஸ்', 'வேட்டையாடு விளையாடு' படங்களைக் கொடுத்துவிட்டு தன் சுயதிருப்திகாக முயற்சியாக 'தசவதாரம்' படத்தை எழுதி நடித்தார்.
2006-ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு நல்ல கமர்ஷியல் சினிமாவை கமலிடமிருந்து எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான். 'உன்னப்போல் ஒருவன்', 'மன்மதன் அம்பு', 'விஸ்வரூபம்', 'உத்தம வில்லன்', 'தூங்காவனம்' 'விஸ்வரூபம் 2' என்று தான் போய்கொண்டிருந்தது. கடைசியாக கமலின் கமர்ஷியல் ஹிட் என்றால் 'பாபநாசம்' படத்தைக் கூறலாம்.
70, 80களிலியே தென்னகத்தில் இருந்து பாலிவுட்டுக்கு டஃப் கொடுத்து இந்திய அளவில் தன் இருப்பை பறைசாற்றிக் கொண்டவர் கமல்ஹாசன். கமல்ஹாசனை தொட்டுப் பார்ப்பதே பிறவிப் பலன் என்கிற ரீதியில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான் சிலிர்த்துப் பேசியது எல்லாம் சினிமா வரலாறு. அத்தகைய நட்சத்திரங்களின் நட்த்திரமான கமல்ஹாசனுக்கு, இடைப்பட்ட பான்-இந்தியா என்ற டெர்ம் முளைக்கத் தொடங்கிய காலத்தில், குறிப்பாக, ரூ.100 கோடி க்ளப் பற்றி ரசிகர்களும் சண்டைபோட்டுக் கொள்ளும் சமகாலத்தில் அஜித், விஜய் முதலானோர்தான் இந்திய அளவில் இங்கிருந்து 2K கிட்ஸ்களால் கவனம் ஈர்க்கப்பட்டனர். இடையில், வசூலில் சாதித்து தனது இடத்தை தவறவிடமால் பார்த்துக் கொண்டார் ரஜினி. ஆனால், கமல்..?
இப்படியான நிலையில், மீண்டும் நல்ல கமர்ஷியல் கொடுத்தாகவேண்டும் என்ற கமல் இறங்கியதுதான் 'விக்ரம்'. அதேபோல பசியிலிருந்தவர்களுக்கு கிடைத்த விருந்தைப்போல அவரது கமர்ஷியல் ரசிகர்களுக்கான விருந்தாக அமைந்தது 'விக்ரம்'. அவரின் கடந்த கால கன்டென்ட், கமர்ஷியல் சினிமா பேலன்ஸை வைத்து பார்க்கும்போது, முழுமையாக கமல் சினிமாவில் மீண்டும் கவனம் செலுத்தினால், விரைவில் ஒரு மிகச் சிறந்த கன்டென்ட் கொண்ட சினிமாவை அடுத்த 5 ஆண்டுகள் அல்லது அதற்கு பிறகான ஆண்டுகளில் எதிர்பார்க்கலாம். ஆனால், அதற்கு 'விக்ரம்' படத்தின் கமர்ஷியல் ருசி இடமளிக்குமா என்பதும் சந்தேகம்தான்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago