சென்னை: நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'சர்தார்' திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளது உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ். இதனை ட்வீட் மூலம் அந்த நிறுவனம் உறுதி செய்துள்ளது.
கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'சர்தார்' வரும் தீபாவளி திருநாளன்று வெளியாகவுள்ளது. பி.எஸ்.மித்ரன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். பிரின்ஸ் பிக்சர் பேனில் எஸ்.லக்ஷ்மன் குமார் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இதில் இரட்டை வேடத்தை காரத்தி நடித்துள்ளார் என தெரிகிறது. ராஷி கண்ணா, ஷங்கி பாண்டே, லைலா, முனீஷ்காந்த், முரளி சர்மா, இளவரசு ஆகிய நடிகர்கள் இதில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் ‘சர்தார்’ படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம். இதனை அந்நிறுவனம் ட்வீட் மூலம் உறுதி செய்துள்ளது. கடந்த 2008 வாக்கில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோக பணிகளை கவனித்து வருகிறது இந்த நிறுவனம்.
நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘குருவி’ படத்தை தனது முதல் படமாக தயாரித்து இந்த நிறுவனம். இதுவரை மொத்தம் 15 படங்களை தயாரித்துள்ளது. இதுவரை 30-க்கும் மேற்பட்ட படங்களை வெளியிட்டுள்ளது.
» IND vs SA | பேட்டிங்கில் அசத்திய ருதுராஜ், இஷான் கிஷன்; இந்தியா 179 ரன்கள் குவிப்பு
» ஆண்டர்சன் எனும் அதிசய வீரர் | டெஸ்ட் கிரிக்கெட்டில் 650 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தல்
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago