முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கமல் சந்திப்பு

By செய்திப்பிரிவு

'விக்ரம்' திரைப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றதை அடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலினை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் சந்தித்தார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பஹத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா, காயத்ரி, செம்பன் வினோத் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ள இப்படம் வசூல் ரீதியாக பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

படம் வெளியாகி 11 நாட்கள் கடந்து விட்ட நிலையில், உலகம் முழுவதும் ரூ.300 கோடி வசூலை நெருங்கி வருகிறது 'விக்ரம்'. படம் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், அண்மையில் நடிகர் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜை வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்தார் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி.

தொடர்ந்து, கேரளாவில் லோகேஷ் கனகராஜ், அனிருத் கலந்துகொண்ட படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. படத்தின் வெற்றிக்கு ரசிகர்களிடம் நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகர் கமல்ஹாசன் வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் 'விக்ரம்' வெற்றியையொட்டி, ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்தார்.

விக்ரம் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் ஆர். மகேந்திரன் உடனிருந்தார். முன்னதாக விக்ரம் வெளியான முதல் 3 நாட்களுக்கு சிறப்பு காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

12 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்