மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்க பயணம் மேற்கொள்ளவுள்ள டி.ராஜேந்தரை, நடிகர் கமல்ஹாசன் சந்தித்து நலம் விசாரித்தார்.
தந்தையின் சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்ய நடிகர் சிம்பு அமெரிக்கா சென்றுள்ளார். இன்று இரவு துபாய் வழியாக டி.ராஜேந்தர் குடும்பத்தினருடன் அமெரிக்கா செல்லவுள்ளார்.
இதற்கிடையே, இன்று டி.ராஜேந்தரை நடிகர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். அவர்களுடன், டி.ராஜேந்தர் மகன் குறளரசன் உடனிருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்திரன் அண்மையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குறித்து சிம்பு வெளியிட்ட அறிக்கையில், ''எனது தந்தை குறித்துத் தொடர்ந்து பரவும் வதந்திகள் எதையும் யாரும் நம்ப வேண்டாம். என் தந்தை மிக நலமாக உள்ளார். எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம்.
» “கோவை சரளா நடிப்பு ராட்சசி” - ‘செம்பி’ படக்குழுவை பாராட்டிய கமல்ஹாசன்
» அசர்பைசான் நாடாளுமன்றத்தில் படமாக்கப்பட்ட கார்த்தியின் ‘சர்தார்’
அங்கு பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், தற்போது வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்கிறோம். அவர் முழு சுய நினைவுடன், நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து, உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிரார்த்தனைகளுக்கும், அனைவரின் அன்புக்கும் நன்றி'' என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து டி.ராஜேந்தரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்நிலையில், இன்று மருத்துவ மேல் சிகிச்சைக்காக டி.ராஜேந்தர் அமெரிக்கா செல்லவுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago