'செம்பி' படத்தின் ட்ரெய்லரை பார்த்துவிட்டு 'கோவை சரளா நடிப்பு ராட்சசி' என நடிகர் கமல்ஹாசன் வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும், படக்குழுவுக்கு தனது வாழ்த்துகளையும் அவர் தெரிவித்தார்.
'மைனா' 'கும்கி' 'கயல்' 'தொடரி' படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் பிரபு சாலமன். அவர் அடுத்தாக இயக்கும் படத்திற்கு 'செம்பி' என பெயரிடபட்டுள்ளது.
இந்தப் படத்தில் குக்வித் கோமாளி புகழ் அஸ்வின் நடிக்கிறார். தவிர, கோவை சரளா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தம்பி ராமையா, பழ கருப்பையா உள்ளிட்ட பலரும்நடிக்கின்றனர். நிவாஸ் கே பிரசன்னா, இசையமைக்கும் இப்படத்திற்கு ஜீவன் ஒளிப்பதிவு செய்கிறார்.
» இளையராஜாவுடன் இணையும் வெங்கட் பிரபு
» ‘வாடிவாசல்’ முடிந்த பின்பு விஜய்யிடம் கதை சொல்கிறார் வெற்றிமாறன்?
பிரபுசாலமனின் மற்ற படங்களைப் போல இந்த படமும் காடு சார்ந்த கதைக்களத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதையும், பேருந்தில் நடக்கும் காட்சிகளை மையமாக கொண்டு படம் நகர்வதையும் அண்மையில் வெளியான படத்தின் ட்ரெய்லர் உறுதி செய்தது.. ஜூன் 3-ம் தேதி வெளியான 'செம்பி' படத்தின் ட்ரெய்லரை இயக்குநர் செல்வராகவன் வெளியிட்டார்.
இந்நிலையில், தற்போது கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் விக்ரம் படத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக 'செம்பி' படக்குழுவினர் கமல்ஹாசனை நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது 'செம்பி' படத்தின் ட்ரெய்லரை கமல்ஹாசன் பார்த்து வெகுவாக பாராட்டினார்.
'செம்பி' படத்தின் தயாரிப்பாளர்கள் ட்ரைடெண்ட் ரவீந்திரன், ஏ .ஆர்.என்டர்டைன்மென்ட் ரியா , ஆடிட்டர் அக்பர் அலி, படத்தின் இயக்குநர் பிரபு சாலமன், கோவை சரளா மற்றும் அஸ்வின் ஆகியோர் இந்த சந்திப்பின் போது உடனிருந்தனர்.
மேலும், படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள கோவை சரளாவை 'நடிப்பு ராட்சசி' என்று கமல்ஹாசன் பாராட்டினார். செம்பி படத்தின் டிரைலரை கமல்ஹாசன் பாராட்டியது தங்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளதாகவும், படம் விரைவில் திரைக்கு வர தயாராகி வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago