‘வீடு வாங்க போராடும் குடும்பத்தின் கதை’ - விமல் நடிப்பில் உருவாகும் ‘மஞ்சள் குடை’

By செய்திப்பிரிவு

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் புதிய வீடு ஒன்றை வாங்க எதிர்கொள்ளும் சவால்களை மையமாக வைத்து உருவாகி வருகிறது நடிகர் விமலின் 'மஞ்சள் குடை' திரைப்படம்.

இயக்குநர்கள் சிம்பு தேவன், 'ஜெயம்' ராஜா ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்த சிவம் ராஜா மணி இயக்குநராக அறிமுகமாகும் புதிய படத்தில் நடிகர் விமல் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு 'மஞ்சள் குடை' என பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தை கணேஷ் என்டர்டெயின்மென்ட் ரமேஷ், நாஹர் பிலிம்ஸ் ஜாகீர் உசேன் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். இந்தப் படத்தில் விமலுக்கு ஜோடியாக வால்டர் படத்தில் நடித்த ஷெரின் கஞ்ச்வாலா நடித்துள்ளார்.

இவர்களுடன் எம்எஸ் பாஸ்கர், ரேணுகா ராதாரவி , ஒய்.ஜி. மகேந்திரன், விஜய் டிவி ராமர், மாரிமுத்து ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில், படம் குறித்து இயக்குநர் சிவம் ராஜாமணி கூறுகையில், ''ஃபேமிலி சென்டிமென்ட் மற்றும்ஆக்‌ஷன் கலந்த கதை இது. இன்றைய சூழலில் நடுத்தர மக்களின் பெரிய போராட்டமே வீட்டு வாடகை தான். அப்படி நடுத்தர வாழ்க்கை வாழும் நாயகன் தனது குடும்பத்துடன் சேர்ந்து ஒரு வீடு வாங்க நினைக்கிறார்.

அதற்கு எப்படி பணம் சேர்க்கிறார்கள். புது வீடு வாங்குவதற்கு அவர்கள் படும் போராட்டங்கள், இறுதியில் வீடு வாங்கினார்களா இல்லையா என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை. படப்பிடிப்பு முழுவதும் சென்னையில் லைவ் லொகேஷனில் மட்டுமே எடுத்திருக்கிறோம். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்