''சிறந்த திரைப்படங்கள் மூலம் உங்களைத் தொடர்ந்து என்டர்டெயின் செய்வேன்'' என்று நடிகர் கமல்ஹாசன் 'விக்ரம்' படத்திற்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியான 7 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.250 கோடி வசூலை வாரி குவித்துள்ளது.
இந்நிலையில், இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நடிகர் கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''தமிழர்கள் இல்லாத நாடில்லை. தமிழோசை ஒலிக்காத ஊரில்லை எனும் அளவிற்கு உலகம் முழுக்க பரந்து விரிந்திருக்கும் உலகத் தமிழ் சொந்தங்களுக்கு என் வணக்கம்.
திரையிடப்பட்ட நாடுகளில் எல்லாம் 'விக்ரம்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இந்த பிரமாண்டமான வெற்றியை எனக்கு பரிசளித்த தொப்புள்கொடி உறவுகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
» வேதிகாவின் சாகசப் பயணத்தை மையப்படுத்தும் ’கஜானா’ - ஓர் அறிமுகம்
» ‘சாம்ராட் பிருத்விராஜ்’ காட்சிகள் ரத்து: பட்ஜெட் ரூ.200 கோடி... ஒரு வார வசூல் ரூ.55 கோடி மட்டுமே!
சிறந்த சினிமாக்கள் மூலம் உங்களை தொடர்ந்து என்டர்டெயின்ட் செய்வதுதான் நான் உங்களுக்கு செய்யக்கூடிய பதில் நன்றி என்பதை நான் அறிவேன். அதை செய்வேன். நன்றி'' என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 mins ago
சினிமா
18 mins ago
சினிமா
28 mins ago
சினிமா
33 mins ago
சினிமா
4 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago