வேதிகாவின் சாகசப் பயணத்தை மையப்படுத்தும் ’கஜானா’ - ஓர் அறிமுகம்

By செய்திப்பிரிவு

நடிகை வேதிகா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஆக்‌ஷன் - சாகசங்களுடன் 'கஜானா' திரைப்படம் உருவாகி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இயக்குநர் பிரபாதிஸ் சாம்ஸ் இயக்கத்தில் வேதிகா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் 'கஜானா'. இந்தப் படத்தில் இனிகோ பிரபாகர், சாந்தினி, யோகி பாபு, பிரதாப் போத்தன், வேலு பிரபாகரன், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முதன்மைக் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தை ஃபோர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் (Four Squar Studios) நிறுவனம் தயாரிக்கிறது.

விஎஃப்எக்ஸ், தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாகியுள்ள இப்படத்தில் பிரபல ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்ற இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்தப்படம் குறித்து இயக்குநர் பிரபாதிஸ் சாம்ஸ் கூறுகையில், ''முழுக்கதையும் வேதிகாவின் கதாபாத்திரத்தைச் சுற்றியே சுழலும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. வேதிகா தன் நண்பர்களுடன் சேர்ந்து, பல வருடங்களாக ரகசியமாகப் பாதுகாக்கப்பட்ட புதையலைத் தேட சாகசப் பயணம் மேற்கொள்கிறார். படத்தில் அவருக்கு நிறைய ஆக்‌ஷன் காட்சிகள் உள்ளன.

மேலும், முக்கியப் பகுதிகளை ஒரு காட்டில் படமாக்கியுள்ளோம். படத்தில் வரும் சிஜி காட்சிகள் பார்வையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை தரும் என நாங்கள் நம்புகிறோம். கடந்த காலத்தில் வாழ்ந்ததாக நம்பப்படும் பல வரலாற்று விலங்குகள் மற்றும் உயிரினங்களை எங்கள் தொழில்நுட்பக் குழு வடிவமைத்து உருவாக்கி வருகிறது'' என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

22 mins ago

சினிமா

33 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

மேலும்