நேற்று திருமணம் முடிந்த நிலையில், நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் திருப்பதி கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்தனர்.
கடந்த 2015-ம் ஆண்டு வெளியான 'நானும் ரௌடிதான்' படத்திலிருந்து விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். இருவரின் திருமணம் குறித்து பேச்சுக்கள் அவ்வப்போது அடிப்பட்டு வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன் இவர்களது நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்தது. இதையடுத்து நேற்று மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் இவர்களின் திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது.
பாலிவுட் நடிகர் ஷாருக்கான், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு பிரலங்கள் இந்த திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்நிலையில், இன்று (ஜூன் 10) காலை மணமக்கள் இருவரும் குடும்பத்தினருடன் திருப்பதி சென்றனர். அங்கு ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். அங்கு அவர்களைக் கண்ட ரசிகர்கள் வீடியோ, புகைப்படம் எடுத்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
» விக்ரம் Vs பீஸ்ட் - ஒப்பீட்டுப் பார்வையில் இயக்குநர் நெல்சன் ‘தாக்கப்படுவது’ சரியா?
» ‘தங்கத்துக்கு திருமணம்’ - மருமகள் நயன்தாராவை தமிழகம் கொண்டாடுவதன் பின்புலம் என்ன?
முக்கிய செய்திகள்
சினிமா
12 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago