நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் இன்று சென்னை அருகே மகாபலிபுரத்தில் பிரபலங்கள் சூழ பிரமாண்டமாக நடைபெற்றது. இதையொட்டி நெட்டிசன்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
'நானும் ரவுடிதான்' படத்திலிருந்து நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலிக்கத் தொடங்கினர். ஏறக்குறைய 6 வருடங்களாக காதலித்து வந்தவர்கள் இன்று மண வாழ்க்கையைத் தொடங்கியுள்ளனர்.
முன்னதாக, திருப்பதியில் நடைபெறவிருந்த அவர்களின் திருமணம் பல்வேறு காரணங்களால் சென்னைக்கு மாற்றப்பட்டது. மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு நெட்டிசன்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவற்றிலிருந்து...
male baby:
» இந்தியாவில் அன்றாட கரோனா பாதிப்பு 7,240 ஆக அதிகரிப்பு: நேற்றைவிட 40% அதிகம்
» அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடர்ந்து செயல்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ்
"தனக்கு ஏற்பட்ட தடைகளையும், ஏமாற்றங்களையும்,
துரோகங்களையும்,
வலிகளையும் கடந்து,
பெரிதாக சினிமா பின்னணி இல்லாமல்
தனியாய் போராடி
ஆணவம் நிறைந்த கூட்டத்தின் முன்னே
தனக்கென அரியணை அமைத்து உயர்ந்து நிற்கிறார்... நயன்தாரா"
Erode Kathir:
"நயன்தாரா - விக்னேஷ் திருமணத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களில் சுமார் 1 லட்சம் பேருக்கு இன்று மதியம் கல்யாண சாப்பாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளதாக செய்தி ஒன்று தெரிவிக்கிறது. இது உண்மையாக இருப்பின், மிகவும் போற்றுதலுக்குரிய செயல் இது."
ManojKumar Gopalan:
"அதென்ன காதல் பிரியாணி!
அது எங்கங்க கெடைக்கும்
நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண விருந்து மெனு!"
நீலாம்பரி:
"என்றும் மகிழ்வுடனும்... ஆரோக்கியத்திடனும் வாழ வாழ்த்துகள்"
Paaru
"இருவரும் அழகாக உள்ளீர்கள்.. திருமண வாழ்த்துகள்"
பேரரசி (Empress)
"சில பேர் எல்லாம் ஏன்னே தெரியாம நல்லா இருக்கணும்னு மனசுக்கு தோணும்ல. நயன்தாரா அந்த கேட்டகிரி என் அளவுல! மீதி வாழ்க்கை பூரா சந்தோசமா, சிறப்பா வாழட்டும்.."
pradeepraja
"Happy married life"
கம்யூனிஸ்ட் இஞ்சினியர்
"வாழ்த்துகள்.. சிறப்பான வாழ்க்கை அமையட்டும்.."
மருத்துவ மைனர்
"வாழ்த்துகள் விக்கி & நயன்தாரா"
Sangeetha Velmurugan:
ஒரு நூறு பொம்பளைங்க இருக்குற ஆபீஸ்லயோ இல்ல அபார்ட்மெண்ட்லயோ., ஒரு நாலு பொண்ணுங்க மட்டும் நல்ல அழகா, பாக்க பளிச்சுனு ட்ரெஸ் பண்ணி, கொஞ்சம் தனித்தன்மையோட யோசிச்சு அறிவா பேசினாலே, அவங்களை பத்தி spicy gossips பேசி,character assassinate பண்ணி அடிச்சு காலி பண்ணி உக்கார வைக்கிற சமுதாயத்தில.,4மொழிகள்ல நல்லா அறிமுகமான ஒரு நடிகையா இருந்த சமயத்தில,பொது ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் தெரிஞ்சு ரெண்டு காதல் தோல்வி., உறுதி செய்யப்படாத பல பல கிசுகிசுக்கள், நடிச்ச முதல் படத்தில இருந்தே body shamingன்னு பல அவமானங்களை சந்திச்ச மிக கரடுமுரடானா 19 ஆண்டுகள் கிராஃப் நயன்தாரவுடையது.
பட்ட அத்தனை அவமானங்களுக்கு பிறகு, யாராக இருந்தாலும் அழிந்து போயிருக்க கூடும்., ஆனால் அதன் பிறகு நயன் அசராமல் நின்று ஆடிய செகண்ட் இன்னிங்ஸ் அட்டகாசமானது!!. ஒரே வருடத்தில் தென்னிந்திய மொழிகள் 4லும் பிளாக்பஸ்டர் வெற்றிகள்!!அத்தனை உச்ச ஹீரோக்களுடனும் படங்கள்!!
மாயா, அறம், புதிய நியமம்,கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள்,ஐரா, கொலையுதிர் காலம்,நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன், நிழல் என அடுத்தடுத்து Female Centric படங்கள்! இளம் இயக்குனர்கள் எல்லாம் நயனுக்காக யோசித்து கதை எழுதும் அளவுக்கு ஒரு தனிப்பெரும் நாயகியாக, லேடி சூப்பர் ஸ்டாராக அவருடையது அசுர வளர்ச்சி!!
she came!! she conquered!! she ruled!!
காதலில் இருப்பதை சொன்னால், வாய்ப்பில்லாமல் போய்விடுமோ என பயந்து ஒளிந்து காதல் செய்த ஹீரோயின்களுக்கு மத்தியில்,தன் காதலனுடன் லிவிங் டுகெதரில் இருந்து கொண்டே, கரியரில் உயரம் தொட்டு சாதித்து காட்டிய திறமையாளர் நயன்!! தன் பர்சனல் வேறு, பணி வேறு, என நிரூபித்து காட்டியவர்!!
Public Display of Affection (PDA) என்று சொல்வார்கள்.. தான் அன்பு செய்யும் ஒருவரை பொது வெளியில், பிறர் பற்றிய கவலை துளியும் இல்லாமல் கொண்டாடி தீர்க்கும் இயல்பு!! விக்னேஷ் சிவன் அதில் Expert!! And she deserved to be celebrated in that way!!
தன்னை கொண்டாடும் ஒருவனுடன் தங்கத்துக்கு இன்று திருமணம்!! மகிழ்ந்து வாழட்டும்!! வன்மங்கள் தொலைத்து வாழ்த்துவோம் ❤
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago