ஜுலை 11ம் தேதி முதல் நளனும் நந்தினியும்

By ஸ்கிரீனன்

மைக்கேல், நந்திதா நடிக்க, ஆர்.வெங்கடேஷ் இயக்கியிருக்கும் 'நளனும் நந்தினியும்' திரைப்படம் ஜுலை 11ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு

மைக்கேல், நந்திதா, சூரி, ஜெயப்பிரகாஷ், சாம்ஸ் உள்ளிட்ட பலர் நடிக்க வெங்கடேஷ் இயக்கியிருக்கும் படம் 'நளனும் நந்தினியும்'. லிப்ரா தயாரிப்பு நிறுவனம் இப்படத்தினை தயாரித்திருக்கிறது. அஸ்வத் இசையமைத்து இருக்கிறார்.

நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த இப்படம் தற்போது ஜுலை 11ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

இப்படம் குறித்து இயக்குநர் வெங்கடேஷ், "குடும்பங்களை எதிர்கொண்ட காதல், புரிதல் இல்லாமல் திருமணத்தில் முடிய, பல இன்னல்களைக் கடந்து வெற்றியடைந்து குடும்பங்களை எப்படி இணைக்கின்றது என்பதே இந்த படத்தின் கரு.

படத்தின் படபிடிப்பு மதுரை கானூரில் நடைபெற்றுக் கொண்டிருந்த போது தொடக்கத்தில் அமைதியாக நடந்து கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் படப்பிடிப்பு படபடப்பானது. ஏனெனில் அப்பொழுது அந்த ஊரில் தொடர் கொலைகள் நடைபெற்றது. ஆகையால் அங்கு பெரிய போலீஸ் கும்பலே குவிந்தது. மக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. உயிர் பயத்திலும் நாங்கள் படபிடிப்பை நடத்தினோம். அப்பொழுது போலீஸ் எங்களை எச்சரித்தது. அவர்களிடம் பேசி சமாளித்து படப்பிடிப்பை நடத்தினோம். எங்களுக்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளருக்கும், ஊர்மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்