பதற்றம், பயம், விபத்து... - கவனம் ஈர்க்கும் நயன்தாராவின் ‘ஓ2’ ட்ரெய்லர்

By செய்திப்பிரிவு

நயன்தாரா நடிக்கும் 'ஓ2' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்தப் படம் ஜூன் 17-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கும்.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஜி.எஸ் எழுதி இயக்கியிருக்கும் புதிய படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா நடிக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். இயக்குநர் விக்னேஷ் வெங்கட்பிரபுவிடம் உதவி இயக்குநராக இருந்தது குறிப்பிடத்தக்கது. 'பார்வதி' என்ற கதாபாத்திரத்தில் நயன்தாரா தாயாகவும், அவரது மகனாக யூடியூப் மூலம் பிரபலமடைந்த குழந்தை நட்சத்திரமான ரித்விக் நடித்திருக்கிறார்.

தமிழ்நாடு, கேரளா இணையும் மலைப்பகுதியில் நடக்கும் கதையாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் வரும் ஜூன் 17-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

சுவாசக்கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் தனது எட்டுவயது மகனுடன் நயன்தாரா பயணிக்கும் பேருந்து விபத்துக்குள்ளாகிறது. இந்த விபத்தில் தனது மகனுக்காக நயன்தாரா வைத்திருக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டரைக் கைப்பற்ற சக பயணிகள் முயற்சிக்கிறார்கள். அந்தப் போராட்டத்தில் வெற்றி பெற்று தாய் தன் மகனை காத்தாரா? இல்லையா? - இதுதான் படத்தின் கதை.

அந்த வகையில் தற்போது வெளியாகியிருக்கும் ட்ரெய்லரை பொறுத்தவரை விறுவிறுப்பாக தொகுக்கப்பட்டிருக்கிறது. முதல் இரண்டு, மூன்று காட்சிகளுக்குப் பின், பதற்றம், பயம், விபத்து, என ட்ரெய்லரே படத்தின் ஒட்டுமொத்த ஆன்மாவையும் கடத்தி வருகிறது.

தவிர, ட்ரெய்லரில் வரும் 'எந்த ஒரு தாயும் தன் குழந்தைக்கு ஆபத்துன்னா பாத்துட்டு சும்மா இருக்கமாட்டா' என்ற வசனம் கவனிக்க வைக்கிறது. மேலும், நயன்தாரா மற்றும் குழந்தை ரித்விக்கின் நடிப்பு ட்ரெய்லரில் காணும்போதே அழுத்தமாக இருக்கிறது. இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது.

ட்ரெய்லர் வீடியோ :

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 mins ago

சினிமா

12 mins ago

சினிமா

44 mins ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்