நடிகர் சங்க கட்டிட பணிகள் குறித்து ரஜினி விசாரித்தார் - நாசர் 

By செய்திப்பிரிவு

சென்னை : நடிகர் சங்க கட்டிடப் பணிகள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் அக்கறையாக விசாரித்ததாக நடிகர் சங்கத்தலைவர் நாசர் தெரிவித்துள்ளார்.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினியின் வீட்டில், நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி மற்றும் துணைத்தலைவர் பூச்சி முருகன் ஆகியோர் அவரை நேரில் சந்தித்துப் பேசினர். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த சந்திப்புக்கு குறித்து நடிகர் சங்கத் தலைவர் நாசர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ''இது மரியாதை நிமிர்த்தமான சந்திப்பு தான்.

இரண்டு வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு நடிகர் சங்கத் தேர்தல் முடிந்து, நடிகர் சங்க கட்டிட பணிகளை துவங்க உள்ளோம். அதற்காக ஒவ்வொருவராக சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அதன்படி இன்று நடிகர் ரஜினிகாந்த் அவர்களை மரியாதை நிமிர்த்தமாக இன்று நேரில் சந்தித்துப் பேசினோம். அப்போது அவர், கட்டிட பணிகள் பற்றி மிகவும் அக்கறையாக விசாரித்தார். மேலும், கட்டிடம் குறித்து நிறைய ஆலோசனைகளையும் வழங்கினார்'' பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்