நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ள 'பொம்மை' திரைப்படத்தின் ட்ரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் புதன்கிழமை வெளியிட்டார்.
இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் படம் 'பொம்மை'. இதில் நாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த 2020ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் பணிகள் கொரோனா காரணமாக தள்ளிப்போய் கொண்டே இருந்ந்தது.
இந்நிலையில் தற்போது படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லரில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பெயருக்கு முன்பாக 'யங் மேஸ்ட்ரோ' என அடைமொழியிடப்பட்டுள்ளது அவரது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தப் படம் காதல் கலந்த சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகியிருப்பதை உறுதி செய்கிறது ட்ரெய்லர். 'உலகத்தில் மிகவும் விசித்தரமானது மனிதனின் மூளை' என தொடங்கும் வசனத்துடன் ட்ரெய்லர் ஆரம்பிக்கிறது.
» அனுமதியின்றி கார் பந்தயம்: ஜோஜு ஜார்ஜுக்கு அபராதம்
» விக்ரம் (1986) | சுஜாதாவின் ஸ்டைல், ராஜாவின் மிரட்டல், கமலின் சாகசம் - ஒரு ரீவைண்ட் பார்வை
படம் விஞ்ஞானம், அறிவியலுக்கு நெருக்கமான கதைக்களத்துடன் உருவாகியிருப்பதாக தெரிகிறது. குறைந்த வசனங்களே கொண்ட ட்ரெய்லரின் பெரும் பகுதியை இசை ஆக்கிரமித்திருக்கிறது.
எஸ்.ஜே.சூர்யா பேட்டி ஒன்றில் கூறியது போல, இசைக்கு படத்தில் அதீத முக்கியத்துவம் அளித்துள்ளதை உணர முடிகிறது. பொம்மையை மையமாக வைத்து புதிய களத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர். படத்தின் மீதான எதிர்பார்ப்பு ட்ரெய்லரின் மூலம் அதிகரித்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago