ரஜினிகாந்த் உடன் கமல்ஹாசன் சந்திப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் கமல்ஹாசன் சந்தித்து பேசினார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் ‘விக்ரம்’. இதில், விஜய் சேதுபதி, பகத் பாசில், செம்பன்வினோத், நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, ஷிவானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சூர்யா, சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பான் இந்தியா முறையில், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழியில் உருவாகியுள்ள இப்படம், ஜூன் 3-ம்தேதி வெளியாகிறது.

4 ஆண்டுகளுக்கு பிறகு, கமல்ஹாசன் நடித்துள்ள படம் வெளிவருவதால், ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் புரமோஷன் வேலைகளில் கமல்ஹாசன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதையொட்டி, தற்போது அவர் மலேசியா சென்றுள்ளார்.

அங்கு செல்வதற்கு முன்பு,நடிகர் ரஜினிகாந்தை, சென்னைபோயஸ் தோட்டத்தில் உள்ளஅவரது இல்லத்துக்கு சென்றுகமல்ஹாசனும், இயக்குநர்லோகேஷ் கனகராஜும் சந்தித்துபேசியுள்ளனர். அந்த புகைப்படத்தை, லோகேஷ் கனகராஜ் தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்