வரும் ஜூன் 9ம் தேதி நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெறவுள்ளது.
இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். 'நானும் ரவுடிதான்' திரைப்படத்தில் நடித்தபோது இருவரும் காதலிக்க தொடங்கினர். இருவரும் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில், இவர்கள் திருமணம் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், ''தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் குடும்பத்தார் முன்னிலையில் எளிமையாக நடந்ததாகவும், திருமணம் குறித்து அனைவருக்கும் வெளிப்படையாக அறிவிப்போம்'' எனவும் நயன்தாரா தெரிவித்திருந்தார்.
'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்பட வெளியீட்டின் போது விக்னேஷ் சிவன் அளித்த பேட்டியில் திருமணத்தை உறுதிப்படுத்தியிருந்தார். இதையடுத்து ஜூன் 9-ம் தேதி திருப்பதியில் இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல்கள் வெளிவந்தன.
ஆனால் இப்போது இவர்களின் திருமணம் சென்னை மகாபலிபுரத்தில் நடக்கவுள்ளதை அறிவித்துள்ளனர். தனியார் ஊடகம் ஒன்றுக்கு இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர். முதலில் திருப்பதியில் திருமணம் நடத்த இருவரும் திட்டமிட்ட நிலையில், அங்கு 150 விருந்தினர்கள் வரை திருமணத்தில் கலந்துகொள்ள திருப்பதி கோவில் நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இதனாலே இப்போது திருமணத்தை மகாபலிபுரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளனர். மகாபலிபுரத்தில் ஒரு ரிசார்ட்டில் அதே ஜூன் 9-ம் தேதி விமரிசையாக நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் நடக்கவுள்ளது. திருமண நிகழ்வை தனியார் ஓ.டி.டி நிறுவனம் ஒன்று வெளியிட உள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago