இயக்குநர் வசந்த பாலன் இயக்கும் 'அநீதி' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. படம் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
'கைதி' 'மாஸ்டர்' படங்களில் நடித்து தனது தனித்துவ குரலால் கவனம் ஈர்த்த அர்ஜூன் தாஸ், இயக்குநர் வசந்த பாலனின் புதிய படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். 'சார்பட்டா பரம்பரை' பட பிரபலம் துஷாரா விஜயன் இந்தப் படத்தில் நாயகியாக நடிக்கிறார். த
வனிதா விஜயகுமார், 'நாடோடிகள்' பரணி, 'பிக் பாஸ்' புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, விஜய் டிவி புகழ் 'அறந்தாங்கி' நிஷா, காளி வெங்கட், சாரா, அர்ஜூன் சிதம்பரம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
» “வடக்கையும் தெற்கையும் பிரித்துப் பார்க்க கூடாது” - கமல்ஹாசன்
» உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் ஆர்கே சுரேஷின் ஒயிட் ரோஸ்
'அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ்' நிறுவனத்தின் சார்பில் வசந்த பாலன் இந்தப் படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமாக உள்ளார். 'அநீதி' என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். பாடல்களை கார்த்திக் நேத்தா, ஏகாதசி எழுதியுள்ளனர்.
வசந்த பாலனின் முந்தையப் படங்களில் பாடல்கள் எழுதிய மறைந்த கவிஞர் நா.முத்துக்குமாரின் நட்பின் நினைவாக நா.முத்துக்குமாரின் கவிதைகளிலிருந்து வரிகளைத் தொகுத்து ஒரு திரைப்பாடலுக்கு பயன்படுத்தியுள்ளனர். இந்நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் படம் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
16 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago