நடிகர் தனுஷின் ‘நானே வருவேன்’ படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் ஓடிடி தளம் கைப்பற்றியுள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் 'நானே வருவேன்'. இந்தப் படத்தின் நாயகியாக இந்துஜா நடித்துள்ளார். இசையமைப்பாளராக யுவன் பணிபுரிந்து வருகிறார். இந்தப் படத்தில் செல்வராகவனும் நடித்து வருகிறார்.பல்வேறு இயக்குநர்கள் இயக்கத்தில் நடித்து வரும் செல்வராகவன், தனது இயக்கத்தில் தானே நடிக்கும் முதல் படமாக ‘நானே வருவேன்’ அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கினாலும் எந்த அப்டேட்டும் கொடுக்காமல் இருந்து வந்த படக்குழு சமீபத்தில் ‘நானே வருவேன்’ படத்தில் தனுஷ் இரட்டை கதாபாத்திரங்களில் நடிப்பதை உறுதி செய்து போஸ்டரை வெளியிட்டது.
இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், ‘நானே வருவேன்’ படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் ஓடிடி தளம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
» யுவன் சங்கர் ராஜாவை நெகிழ வைத்த நடிகர் கார்த்தி
» கடுகைத் துளைத்து ஏழ் சினிமாவை எடிட் செய்து புகுத்தும் Montage Of யூடியூப் தளம்!
இதுமட்டுமில்லாமல், மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’, ‘வாத்தி’ அருண் மாதேஸ்வரன் இயக்கங்களில் 'கேப்டன் மில்லர்' படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago