கேன்ஸ் பட விழாவில் வெளியிடப்பட்ட பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ ஃபர்ஸ்ட் லுக்

By செய்திப்பிரிவு

கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ், நீலம் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் பா.ரஞ்சித் எழுதி இயக்கும் 'வேட்டுவம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கேன்ஸ் பட விழாவில் வெளியிடப்பட்டது.

'அட்டக்கத்தி' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் பா.ரஞ்சித். இந்தப் படத்தைத் தொடர்ந்து 'மெட்ராஸ்', 'கபாலி', 'காலா' உள்ளிட்ட படங்களை இயக்கினார். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக இருக்கும் பா ரஞ்சித்தின் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் 'சார்பட்டா பரம்பரை'. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்ததாக 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.

இயக்கம் மட்டுமல்லாமல், தன்னுடைய 'நீலம் புரொடக்ஷன்ஸ்'நிறுவனம் மூலம் படங்களை தயாரித்தும் வருகிறார். அதன்படி, 'பரியேறும்பெருமாள்' 'இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு', 'ரைட்டர்', 'குதிரைவால்', 'சேத்துமான்' உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, நீலம் ஸ்டுடியோ தயாரிப்பு நிறுவனத்துடன் கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் (Golden Ratio Films) இணைந்து தயாரிக்கும் 'வேட்டுவம்' படம் மற்றும் இணைய தொடரை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்குகிறார்.

இந்நிலையில், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கேன்ஸ் பட விழாவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் இயக்குநர் பா.ரஞ்சித், தயாரிப்பாளர்கள் அபயானந்த் சிங், பியுஷ் சிங், சவுரப் குப்தா, மற்றும் அதிதி ஆனந்த் அஸ்வினி சவுத்ரி மற்றும் பரூல் சிங் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

கேங்ஸ்டர்கள் பற்றிய கதையாக உருவாகவிருக்கும் 'வேட்டுவம்' படத்தில் பணிபுரியும் நடிகர், நடிகையர் மற்றும் தொழிற்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

45 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

மேலும்